அடுத்த வாரம் வானத்தில் தோன்றும் அதிசயம்: 'ஸ்ட்ராபெரி மூன்'.. நிலவு இப்படி சிவப்பாக தெரிய காரணம் என்ன?

|

Full Strawberry Supermoon 2022: இந்த ஆண்டின் ஜூன் மாதம் அரிய பிரபஞ்ச நிகழ்வுகளால் நிறைந்துள்ளது. இந்த மாதத்தின் துவக்கத்தில் அனைத்து கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் இணைந்திருப்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும், அடுத்த வாரம் நிகழவிருக்கும் பிரபஞ்ச நிகழ்வு, உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கப் போகிறது. ஆம், அடுத்த வாரத்தில் நமது பூமியின் இயற்கை செயற்கோள் என்று அழைக்கப்படும் நிலவானது ஒரு அரிய நிகழ்வால் 'ஸ்ட்ராபெரி மூன்' ஆக காட்சியளிக்கப் போகிறது. இதை சிலர் ஹனி-மூன் என்று அழைக்கிறார்கள், அதற்கான காரணம் என்ன தெரியுமா?

பூமியில் எப்போது முழு நிலவு தோன்றும்? அறிவியல் உண்மை என்ன?

பூமியில் எப்போது முழு நிலவு தோன்றும்? அறிவியல் உண்மை என்ன?

ஸ்ட்ராபெரி மூன் நிகழ்வு அல்லது ஹனி-மூன் நிகழ்வு என்றழைக்கப்படும் இந்த நிகழ்வுகள் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னதாக, பூமியில் எப்போது முழு நிலவு தோன்றும் என்ற அறிவியல் உண்மையைத் தெரிந்துகொண்டு நேரடியாக விஷயத்திற்குச் செல்லலாம். ஒரு முழு நிலவு பூமியைச் சுற்றி வரத் தோராயமாக 29 நாள் எடுத்துக்கொள்கிறது. சூரியனுக்கு நேர் எதிரே சந்திரன் தரையிறங்கும் போது முழு நிலவு நிகழ்வை நாம் காணுகிறோம். சூரிய ஒளியின் உதவியுடன், நிலவின் தெளிவான பக்கம் பூமிக்கு முழுமையாகத் தெரிகிறது.

நிலவு பெரியதாகத் தோன்ற இது தான் காரணமா?

நிலவு பெரியதாகத் தோன்ற இது தான் காரணமா?

இதனால், தான் பார்வையாளர்கள் நிலவைப் பெரிதாகவும், முற்றிலும் வட்டமாகவும், ஒளிர்வாகவும் பார்க்க முடிகிறது. நிலவின் மாதாந்திர சுழற்சியின் போது, ​​சந்திரன் எட்டு கட்டங்களில் பயணிக்கிறது மற்றும் முழு நிலவு பொதுவாக அதன் நடுவில் நடைபெறுகிறது. எனவே, அடுத்த முறை எப்போது முழு நிலவு தெரியும் என்பதை அறிந்துகொள்ள இந்த தகவல் பெரிதும் பயனளிக்கும். சந்திரன் சூரியனிடமிருந்து எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாம் சந்திரனைப் பார்க்க முடியும் என்பதே உண்மை.

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

ஃபுல் ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் நிகழ்வு

ஃபுல் ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் நிகழ்வு

பெரிய நிலவுகள் முழு நிலவை உள்ளடக்கிய முதல் காலாண்டு முதல் மூன்றாம் காலாண்டு வரையிலான கட்டங்களில் நடைபெறுகின்றன. இருப்பினும், நாம் பார்க்கப்போகும் அடுத்த முழு நிலவு ஒரு குறிப்பிட்ட காட்சியாக இருக்கும்; காரணம் இது ஒரு 'ஃபுல் ஸ்ட்ராபெரி சூப்பர்மூன்' நிகழ்வை உருவாக்கப் போகிறது. சந்திரனின் சுற்றுப்பாதை பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதே நேரத்தில் சந்திரன் நிரம்பியிருக்கும் போது சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுகிறது. இது வழக்கத்தை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றி காட்சியளிக்கிறது.

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு முழு நிலவும் ஃபுல் மூன் நிகழ்வில்லை

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு முழு நிலவும் ஃபுல் மூன் நிகழ்வில்லை

பூமிக்கு சந்திரனின் மிக நெருக்கமான புள்ளி பெரிஜி என்று அழைக்கப்படுகிறது. இது பூமியிலிருந்து சராசரியாக 226,000 மைல்கள் (363,300 கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. நாம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 12 அல்லது 13 முழு நிலவுகளைப் பார்க்கிறோம். ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதையின் நோக்கு நிலை காரணமாக, ஒவ்வொரு முழு நிலவும் ஒரு சூப்பர் மூன் அல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு முழு சந்திரனும் ஒரு ஃபுல் மூன் நிகழ்வல்ல.

ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..

'ஸ்ட்ராபெரி மூன்' நிகழ்வை இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

'ஸ்ட்ராபெரி மூன்' நிகழ்வை இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?

சரி, அடுத்த முழு நிலவு எப்போது நிகழ்கிறது? நமது கண்களுக்கு விருந்தளிக்கப் போகும் கண்கவர் முழு ஸ்ட்ராபெரி நிலவு எப்போது நிகழப்போகிறது? ஸ்ட்ராபெரி ஃபுல் மூன் நிகழ்வு வரும் ஜூன் 14 ஆம் தேதி அன்று, இந்திய நேரப்படி மாலை 5:22 மணிக்கு உச்சத்தை எட்டும், ஆனால் அது இரவு முழுவதும் வித்தியாசமாக இருக்காது, ஒருவேளை ஒரு இரவுக்கு முன்னரோ அல்லது பின்னரோ கூட, அதனால் உங்களுக்கு இந்த அரிய கண்கவர் நிகழ்வைக் காண ஏராளமான நேரம் கிடைத்துள்ளது.

வழக்கத்தை விட பெரியதாகக் காட்சியளிக்கும் நிலவு

வழக்கத்தை விட பெரியதாகக் காட்சியளிக்கும் நிலவு

இருப்பினும், Space.com இன் படி, சந்திரன் உண்மையில் அதன் உச்சத்திற்கு முந்தைய இரவும் பின்பும் சாதாரண நட்சத்திரப் பார்வையாளருக்கு முழுமையாகத் தோன்றும். சந்திரனின் வெளிப்படையான விட்டம் 33' 56" ஐ அடைய உள்ளது. அதாவது, மே மாதம் தோன்றிய முழு நிலவை விட இது பகுதியளவில் பெரியதாக இருக்கும். இந்த நிகழ்வின் போது, சந்திரன் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதிக சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும். இதற்கான உண்மை காரணம் என்ன தெரியுமா?

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

நிலவு ஏன் சிவப்பாகத் தெரிகிறது தெரியுமா?

நிலவு ஏன் சிவப்பாகத் தெரிகிறது தெரியுமா?

முழு நிலவு நேரங்களில் தோன்றும் சிவப்பு நிறத்தை 'சந்திரன் மாயை' என்று அலைகிறார்கள். இது ஒரு ஒளியியல் விளைவு ஆகும். இது சந்திரன் உதயத்திற்குப் பிறகு அல்லது அஸ்தமனத்திற்கு முன் அடிவானத்திற்கு நெருக்கமாக இருக்கும்போது சந்திரனின் முழு கட்டங்கள் பெரிதாகத் தோன்றும் போது ஏற்படுகிறது. இருப்பினும், இது ஒரு மாயை மட்டுமே என்கிறது நாசா, ஏனெனில் சந்திரன் உண்மையில் பெரியதாக இல்லையாம். இந்த நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் கவனித்து வந்தாலும், நாம் ஏன் நிலவை பெரியதாகப் பார்க்கிறோம் என்பதற்கான திருப்திகரமான அறிவியல் விளக்கம் நாசாவிடமே இல்லையாம்.

Best Mobiles in India

English summary
How and When To Watch Strawberry Moon 2022 On June 14 In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X