Amazon இன் வெற்றிக்கு இது தான் காரணமா? தடைகளை உடைத்தெறிந்தது முன்னிற்கு வந்தது எப்படி?
அமேசான் (Amazon) பற்றித் தெரியாதவர் என்று இன்றைய சூழ்நிலையில் ஒருவரையும் சுட்டிக்காட்டவே முடியாது. அந்த அளவிற்கு இந்த உலகையே தனது கைகளுக்குள் கொண்டு வந்துள்ளது இந்த அமேசான். ஆனால், இந்த நிறுவனம் ஆரம்பித்த சில ஆண்டுகளில் அதன் நிறுவனருக்கு கூட இந்த அளவு அமேசான் வெற்றிக்கொடி நாட்டும் என்ற நம்பிக்கை இல்லையாம்.
அதற்காக இந்த வெற்றி அவங்களுக்கு எளிதில் கிடைத்தது என்று சொல்லிவிட முடியாது. இந்த வெற்றிக்காக அவர்கள் போட்டுள்ள உழைப்பு மிக அதிகம். இந்த நிறுவனம் தனது வெற்றிப் பயணத்தில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் என்னென்ன? பார்க்கலாம் வாங்க...

1994ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) என்பவரால் ஆன்லைன் புத்தக விற்பனைக்கு ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அமேசான் நிறுவனம். அதில் இருந்து படிப்படியாக முன்னேறி இன்று சின்னக் குண்டூசியில் இருந்து பெரிய டிவி (TV), ஃப்ரிட்ஜ் (Fridge) வரை அனைத்தையும் ஆன்லைனில் விற்பனை செய்யும் ஒரு தளமா உருவெடுத்துள்ளது.
ஆரம்பகாலத்தில் ஜெஃப்பிற்கே இந்த நிறுவனம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை இல்லை என்று சொல்லப்படுகிறது. அமேசான் ஆரம்பித்து சுமார் 5 ஆண்டுகள் கழித்து, "இந்த நிறுவனம் வெற்றியடையும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், எங்களால் முடிந்த உழைப்பை முழுமையாக போடுகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் திரைக்கதை இங்கே தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அவரது வார்த்தைகள் நம்பிக்கை இல்லாதது போல இருந்தாலும், அதையே காரணமாக வைத்து சோர்ந்து போகாமல் அவர் சொன்னபடியே முழு உழைப்பையும் போட்டதற்கான அடையாளம் தான் அமேசானின் இன்றைய வெற்றி.

அவர்களுடைய வெற்றிக்கு மற்றொரு முக்கியமான காரணமும் உள்ளது. அவர்கள் என்ன நோக்கத்துடன் அமேசான் நிறுவனத்தை ஆரம்பித்தார்களோ அதனுடன் நிறுத்திக்கொள்ளாமல் அந்தந்தக் காலகட்டத்தின் தேவைக்கு ஏற்ப அவர்களுடைய வட்டத்தை விரிவு படுத்தியுள்ளனர். மக்களுடைய அன்றாட தேவைக்கான பொருட்களை மலிவு விலைக்கு வியாபாரிகளிடம் இருந்து பண்ட மாற்றம் செய்வது, வீடியோக்கள் ஸ்ட்ரீம் (Video Streaming) செய்வது, திரைப்படங்களை வெளியிடுவது என்று ஆரம்பித்து சமீபகாலமாக தங்களுடைய பிரத்தியேக பொருட்களை தயாரிப்பதிலும் இறங்கியுள்ளனர்.
2005ஆம் ஆண்டு அவர்கள் ஆரம்பித்த ப்ரைம் (Prime) சேவையில் இப்போது வரை 10 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர். சர்வதேச அளவில் மக்கள் பணம் செலுத்தி சந்தாதாரர்களாக இணையும் இரண்டாவது நிறுவனமாக தற்போது அமேசான் ப்ரைம் திகழ்ந்து வருகிறது.
ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டபோது கேளியும் கிண்டலும் செய்தவர்களுடைய வாயை அடைக்கும் வகையில் 2007ஆம் ஆண்டு சொந்தமா "கிண்டில்" (Kindle) என்ற ஒரு இ-புக் ரீடரை (e-book reader) ஆரம்பித்தது அமேசான். இது மட்டுமின்றி அலெக்ஸா (Alexa) என்ற ஸ்மார்ட் எக்கோ ஸ்பீக்கரை (Smart Echo Speaker) அறிமுகம் செய்து தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு டஃப் (Tough) கொடுக்க ஆரம்பித்துள்ளது.
ஏற்றங்களை மட்டுமின்றி 2018ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தன்னுடைய சந்தை மதிப்பில் வீழ்ச்சியையும் கண்டுள்ளது அமேசான். அதிலிருந்து மீண்ட அமேசானின் கடந்த ஆண்டு வருமானம் சுமார் ரூ. 41 லட்சம் கோடியாம். நெட்ஃப்லிக்ஸ் (Netflix), ஃபேஸ்புக் (Facebook), ஆப்பிள் (Apple), கூகுள் (Google) போன்ற பல முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக அமேசான் இன்று கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாத


Click it and Unblock the Notifications








