Home
News

ரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.!

ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி வருவதால் 90% ரயில்கள் சரியான நேரத்திற்கு செல்வது மட்டுமின்றி சரியான, முறையான, குறித்த காலத்தில் ரயில்களுக்கு பராமரிப்பு பணியும் நடைபெறுகிறது.

By Siva Lingam

ஏஐ என்று கூறப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் குறித்து அனைவரும் அறிந்திருப்போம். இந்த ஏஐ டெக்னாலஜி தற்போது ரயில்வே துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. ரயில்வே துறையினர் பராமரித்து வரும் ரயில்வே தண்டவாளங்களின் நிலை குறித்து இந்த ஏஐ டெக்னாலஜி மூலம் கண்டுபிடித்து அதில் குறை இருந்தால் சரிசெய்யவும், மாற்றவும், பின்னர் அடுத்ததாக பராமரிக்க வேண்டிய தேதியையும் கணக்கிடலாம்.

ரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.!

இதன் மூலம் ரயில்கள் தாமதமின்றி இயக்கவும், மக்கள் சேவைக்கு இடையூறு இன்றி பயன்படுத்தவும் உதவுகிறது என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இந்தியாவில் ரயில்வே தண்டவாளங்களை பராமரிப்பதில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் ரயில்வே துறை தாமதம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தற்போது ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி வருவதால் 90% ரயில்கள் சரியான நேரத்திற்கு செல்வது மட்டுமின்றி சரியான, முறையான, குறித்த காலத்தில் ரயில்களுக்கு பராமரிப்பு பணியும் நடைபெறுகிறது. ஏஐ டெக்னாலஜி காலண்டர் மூலம் எந்த ரயிலுக்கு எப்போது பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்பதை அறிந்து சரியாக செய்யப்படுகிறது.

ரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.!

பெரிய பராமரிப்பு பணிகள் இருந்தால் அந்த பணிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படுவதால் பயணிகளுக்கு பாதிப்பு இல்லாமல் உள்ளது என்று கூறிய ரயில்வே துறை அதிகாரிகள் ஏஐ டெக்னாலஜி மூலம் ரயில் தண்டவாளங்கள் ஆட்டோமெட்டிக் டிராக் மிஷின்கள் மூலம் கண்டறியப்பட்டு குறை இருந்தால் சரி செய்யலாம் என்றும் கூறினர்.

ரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.!

இதனால் ரயில்வே தண்டவாளங்களின் பிடிப்புகள் உறுதியாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும் உள்ளது. இந்த டெக்னாலஜி மூலம் ரயில்வே துறையில் உள்ள குறைகள் சரிசெய்யப்படுவதால் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை கூறியுள்ளது.

இந்த ஏஐ டெக்னால்ஜியின் உதவியால் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ரிப்பேர் சரி செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் ஒழுங்குபடுத்தப்படுகிறது. இதனால் கடைசி நேரத்தில் நிகழும் ரிப்பேர்கள் தவிர்க்கப்பட்டு பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் சேவை செய்ய முடிகிறது என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த டெக்னாலஜி காரணமாக ரயில் வரும் நேரத்தை முன்கூட்டியே பயணிகள் அறிந்து கொள்ள முடிவதாகவும் ரயில்களின் தாமதத்தையும் அறிந்து கொள்ள முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
How AI could make Indian Railways safer : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X