AI உதவியுடன் 24GB RAM போன்களை அறிமுகம் செய்யவுள்ள டாப் 5 நிறுவனங்கள்.. எப்படி? எப்போது?
பெரிய பிராண்ட், பளபளப்பான கலர் ஆப்ஷன்கள், 200 எம்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி என சில மேலோட்டமான விஷயங்களை மட்டுமே வைத்து புதிய ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது!
இப்போதெல்லாம் என்ன சிப்செட்? பழைய மாடலில் உள்ள சிப்செட்டிற்கும் புதிய மாடலில் உள்ள மேம்படுத்தப்பட்ட சிப்செட்டிற்கும் இடையே பெர்ஃபார்மென்ஸ் அடிப்படையில் என்ன வேறுபாடுகள் உள்ளன என்பதை எல்லாம் மக்கள் ஆராய தொடங்கிவிட்டன. அவ்வளவு ஏன் ஸ்மார்ட்போன்களின் அறிமுக நிகழ்விலேயே இதுகுறித்த விவரங்கள் விளக்கப்படுகின்றன.

இப்படியாகத்தான் குவால்காம் நிறுவனத்தின் லேட்டஸ்ட் சிப்செட் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite Chipset) செம்ம ஹிட் அடித்தது. குறிப்பிட்ட சிப்செட்டை ஸ்மார்ட்போன்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. ஆனால் இந்த "சிப்செட் கேம்" இனிமேல் தான் சூடுபிடிக்க போகிறது!
ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டிற்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு 2 முக்கியமான சிப்செட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஒன்று - குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2) சிப்செட். இரண்டாவது - மீடியாடெக்கின் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) சிப்செட்.

இவ்விரு சிப்செட்களையும் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதிக விலைக்கு அறிமுகம் செய்யபட அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக லேட்டஸ்ட் லீக்கின் தகவலின்படி, இந்த புதிய ஃபிளாக்ஷிப் சிப்கள் ஆனது அவற்றின் முன்னோடிகளை விட இரண்டு மடங்கு அதிக ஏஐ கம்ப்யூட்டிங் சக்தியை (AI computing power) வழங்குமாம்.
இதன் விளைவாக, நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் ஏஐ தேவைகளை பூர்த்தி செய்ய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் 24 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்ட்ரோரேஜ் (24GB RAM and 1TB Storage) ஆப்ஷனை வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறார்களாம்

ஒரு வருடத்திற்கு முன்பு, பெரும்பாலான ஸ்மார்ட்போன் பிராண்டுகள் அதிகரித்து வரும் மெமரி செலவுகள் (Memory Costs) காரணமாக 24ஜிபி மாடல்களை அறிமுகப்படுத்துவதில் இருந்து பின்வாங்கின. விலைகள் உயர்ந்ததாலும், அதற்கான தேவை குறைவாக இருந்ததாலும், பெரிய அளவிலான மெமரி உடன் வந்த ஸ்மார்ட்போன்கள் குறுகிய காலத்திலேயே "உந்துதல் வேகத்தை" இழந்தன.
இதன் விளைவாக ஸ்மார்ட்போன் சந்தை ஆனது அதிகபட்சமாக ஆப்ஷன் ஆக 12ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் உடன் நின்றுகொண்டது. ஆனால் ஏஐ ஹார்ட்வேர் (AI Hardware) ஆனது இந்த ஆட்டத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல உள்ளது.
ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் ஆனது 100 டாப்ஸ் (100 TOPS) வரை.. அதாவது வினாடிக்கு டிரில்லியன் செயல்பாடுகள் (Trillion operations per second) வரை ஏஐ செயல்திறனை வழங்குகிறது. மறுகையில் உள்ள டைமன்சிட்டி 9500 சிப்செட்டில் இருந்தும் இதேபோன்ற செயல்திறன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விளைவாக, ஸ்மார்ட்போன் சந்தையின் டாப் 5 பிராண்டுகள் இப்போது 24ஜிபி ரேம் + 1டிபி கான்ஃபிகரேஷன்ஸ் உடனான பிரீமியம் மாடல்களை மீண்டும் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் குறிப்பிடுகிறார். 24ஜிபி ரேம் என்றால் நிச்சயமாக அந்த ஸ்மார்ட்போன்கள் ஆனது விலைகளும் உயர்வை காணக்கூடும். 24ஜிபி ரேம் உடன் வரும் ஸ்மார்ட்போன்களின் விலையை டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளிப்படையாக குறிப்பிடவில்லை என்றாலும், மெமரி அம்சங்களில் ஏற்படும் ஏற்றம் நிச்சயமாக ஸ்மார்ட்போனின் அதிக விலைகளுக்கு வழிவகுக்கும்.

சமீபத்தில் லீக் ஆன கீக்பெஞ்ச் 6 ஸ்கோரஸ் (Geekbench 6 scores) ஆனது இந்த சிப்செட்கள் எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கலாம் என்பதற்கான ஒரு மேலோட்டமான பார்வையை நமக்கு தருகின்றன. ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 சிப்செட் ஆனது சிங்கிள்-கோர் சோதனைகளில் 4,000 புள்ளிகளுக்கு மேல் எட்டியதாகவும், மல்டி-கோர் சோதனையில் 11,000 புள்ளிகளை தாண்டியதாகவும் கூறப்படுகிறது.
மீடியாடெக்கின் டைமன்சிட்டி 9500 சிப்செட் ஆனது, சிங்கிள்-கோர் சோதனையில் 3,900 க்கும் மேல் மதிப்பெண்களை பெற்றதாகவும் மற்றும் மல்டி-கோர் சோதனையில் 11,000 மதிப்பெண்களை தாண்டியதாகவும் கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இம்முறை வரும் 24ஜிபி ரேம் ஸ்மார்ட்போன்கள் 99% "பேக் அடிக்காது" என்றே கூறலாம்!
Source: Digital Chat Station | Gizmochina


Click it and Unblock the Notifications








