ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சத்தை ஆக்டிவேட் செய்வது எப்படி?
இந்த வசதி மின்னஞ்சல் எழுதுவோருக்கு வார்த்தைகளை டைப் செய்யும் போதே அந்த வாக்கியத்தை நிறைவு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும்.
தொழில்நுட்ப சந்தையில் கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிக டிரெண்ட் ஆகி வருகிறது. ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் என பல்வேறு நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளை தங்களது சாதனங்கள் மற்றும் சேவைகளில் மெல்ல புகுத்த துவங்கிவிட்டன.

கூகுள் நிறுவனம் இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே தனது ஸ்மார்ட்போன்கள், கேமரா மற்றும் செயலிகளில் புகுத்த துவங்கியிருக்கின்றன. இவை கூட்டாக சேர்ந்து சாதனத்தின் ஒட்டுமொத்த பயன்பாடுகளையும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

ஸ்மார்ட் கம்போஸ்
சமீபத்தில் இந்நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையாயன ஜிமெயிலில் ஸ்மார்ட் கம்போஸ் எனும் வசதியை சேர்த்தது. இந்த வசதி மின்னஞ்சல் எழுதுவோருக்கு வார்த்தைகளை டைப் செய்யும் போதே அந்த வாக்கியத்தை நிறைவு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும். ஜிமெயிலின் வெப் வெர்ஷனில் இந்த அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட நிலையில், தற்சமயம் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த வசதியை ஸ்மார்ட்போன்களில் எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
தேவையானவை:
கூகுள் அக்கவுண்ட்
ஜிமெயில் செயலியின் மேம்பட்ட வெர்ஷன் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்க வேண்டும்

பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
ஜிமெயில் செயலி அப்டேட் செய்யப்பட்டதும், அதனை திறக்கும் போது ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் தானாக பாப்-அப் ஆகும்.
இதனை ஆக்டிவேட் செய்ய ஸ்மார்ட்போனில் ஜிமெயில் செயலியை திறந்து திரையின் வலதுபுறமாக காணப்படும் `+' ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.
செயலியில் தற்சமயம் ஸ்மார்ட் கம்போஸ் பாப்-அப் தெரியும், அதனை நிராகரித்து விட்டு டைப் செய்ய துவங்கவும்.

ஆக்டிவேட்
ஜிமெயில் செட்டிங்ஸ் ஆப்ஷன் சென்று பயனர்கள் இந்த வசதியை ஆக்டிவேட் அல்லது டி-ஆக்டிவேட் செய்ய முடியும்.
1 - ஜிமெயில் ஆப் திறந்து திரையின் மேல்பக்கம் இடதுபுறமாக காணப்படும் மூன்று சிறிய கோடுகளை க்ளிக் செய்யவும்.
2 - செட்டிங்ஸ் ஆப்ஷனில் இமெயில் அக்கவுண்ட்டை தேர்வு செய்யவும்.
3 - ஜெனரல் செட்டிங்ஸ் ஆப்ஷனில் ஸ்மார்ட் கம்போஸ் வசதியை இயக்கவும்.
4 - இனி ஆப்ஷனில் இருக்கும் டர்ன் ஆன் அல்லது ஆஃப் பட்டன்களில் ஒன்றை க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications