வீட்டு கணினியில் இருந்து மற்ற கணினிகளை இயக்குவது எப்படி
வீட்டில் இருந்து அலுவலகத்தில் இருக்கும் கணினியை பயன்படுத்த வேண்டுமா. சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் இதை செயல்படுத்த முடியும். இதை எப்படி செய்ய வேண்டும் என்று அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

ரிமோட் டெஸ்க்டாப்
முதலில் ரிமோட் டெஸ்க்டாப் சேவையை செயல்படுத்த வேண்டும். இதற்கு ஸ்டார்ட் மெனு - கன்ட்ரோல் பேனல் - செக்யூரிட்டி - சிஸ்டம் க்ளிக் செய்ய வேண்டும்
அடுத்து ரிமோட் செட்டிங்ஸ் சென்று Allow remote connections to this computer என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்

யூசர்ஸ்
அடுத்து யார் பயன்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும், அதனால் Select Users பட்டனை க்ளிக் செய்து Add button
க்ளிக் செய்து உங்களுக்கு தேவையான யூசர்களை சேர்த்து கொள்ளலாம்

கணினி பெயர்
இணைக்க முயலும் போது கணினியின் பெயரை குறிப்பிட வேண்டும்

ஸ்லீப் மோட்
ஸ்லீப் மோடில் இருக்கும் கணினியை பயன்படுத்த முடியாது, அதனால் நீங்கள் பயன்படுத்த இருக்கும் கணினி ஸ்லீப் மோடில் இல்லாத வாறு பார்த்து கொள்ளுங்கள்.

இணைப்பு
பயன்படுத்த வேண்டிய கணினியுடன் இணைக்க லாக் இன் செய்ய வேண்டும், முதலில் ஸ்டார்ட் மெனு சென்று ரிமோட் டெஸ்க்டாப் கனெக்ஷனை ஓபன் செய்யுங்கள்.
கணினியின் பெயர், யூஸர் பெயர் ஆகியவற்றை என்டர் செய்து Show options என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள், அடுத்து Connect ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும், கனெக்ட் ஆனவுடன் மற்ற கணினியின் டிஸ்ப்ளேவும் தெரியும்


Click it and Unblock the Notifications