ஒரே ஒரு வீடியோ-க்கே 33,30 மில்லியன் VIEWERS.! அப்படியென்ன செய்தார் இந்த யூடியூப் பாட்டி.!

|

உலகின் மிகப்பெரிய வீடியோ ஷேர் சேவை தளமான ஒரே தளம் யூடியூப் மட்டும் தான் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை. குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த தளத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர். மேலும் இதில் வருமானம் வரும் என்பதால் பல்வேறு மக்களுக்கும் தொடர்ந்து புதிய புதிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தலைமுறைக்கு

அதன்படி யூடியூப் இளைய தலைமுறைக்கு மட்டுமல்ல,அங்கு வயதானவர்களும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் தெலுங்கானாவைச் சேர்த கங்கவ்வா என்ற பாட்டி.

மாநிலத்தில் பிறந்த கங்கவ்வா

அதாவது தெலுங்கான மாநிலத்தில் பிறந்த கங்கவ்வா பாட்டிக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆனால் இந்தபாட்டியின் கணவர் குடிபழக்கம் உடையவர் என்பதால் சம்பாதிக்கும் பணத்தை குடிப்பதற்கே செலவு செய்துள்ளார்.

இப்படி ஒரு கம்மி விலையில் ட்ரூலி இயர்பட்ஸ் வாங்க முடியுமா? சாத்தியமாக்கிய BoAt நிறுவனம்!இப்படி ஒரு கம்மி விலையில் ட்ரூலி இயர்பட்ஸ் வாங்க முடியுமா? சாத்தியமாக்கிய BoAt நிறுவனம்!

பாட்டி விவாசய வேலைகளை செய்வது

இந்த நிலையில் கங்கவ்வா பாட்டி விவாசய வேலைகளை செய்வது மற்றும் சிறு தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றியுள்ளார். மேலும் தன் வாழ்க்கையை குடும்பத்திற்காகவே செலவிட்ட இவருக்கு யூடியூபை அறிமுகப்படுத்தியது மருமகன் ஸ்ரீதர் ஆவார்.

 வீடியோக்கள் தயார் செய்து

அவர் பாட்டியை வைத்து வீடியோக்கள் தயார் செய்து வெளியிட துவங்கினார் கிராம வாழ்க்கையை மிகையில்லாமல் அதற்குரிய அழிகியலுடன், அதேசமயம் காமெடி கலந்தும் இவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் பார்வையாளர்களை அதிகமாக கவர்ந்தன.

ATM பரிவர்த்தனை தோல்வியா? அப்போ இனி வங்கியிடமிருந்து தினமும் ரூ.100 அபராதம் வசூலிக்கலாம்!ATM பரிவர்த்தனை தோல்வியா? அப்போ இனி வங்கியிடமிருந்து தினமும் ரூ.100 அபராதம் வசூலிக்கலாம்!

0லட்சம் முறைக்கு மேலாக

அதிலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக இவர்கள் வெளயிட்ட வீடியோ ஆனது இதுவரை 3கோடியே 30லட்சம்முறைக்கு மேலாக பார்க்கப்பட்டுள்ளது. மேலும் MY VILLAGE SHOW என்ற இந்த யூடியூப் சேனலை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர்.

சத்தமில்லாமல் மலிவு விலையில் LG K31 ஸ்மாட்போனை அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம்!சத்தமில்லாமல் மலிவு விலையில் LG K31 ஸ்மாட்போனை அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம்!

 பிரபலங்கள் கூட தங்களின் சினிமாக்களை

பின்பு டோலிவுட்-ல் இருக்கும் பிரபலங்கள் கூட தங்களின் சினிமாக்களை இந்த சேனல் மூலம் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 45000 பேர் இவரை follow செய்கின்றனர்.

யூடியூப் சேனல்

மேலும் யூடியூப் சேனல் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் கிராமப் பகுதியில் நூலகம் ஒன்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்து, எந்நேரமும் செல்போனில் மூழ்கி கிடக்கும் சிலருக்கு வாசிப்பு பழக்கத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
How a village grandmother became a YouTube sensation in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X