கூகுள் மேப்ல இந்த வீடு மட்டும் ஏன் அப்படி தெரியது: காரணம் என்ன?

|

உலகளவில் கூகுள் மேப்ஸ் வசதியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இதில் பல்வேறு புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டை கூகுள் மேப்பில் ப்ளர் (Blur) ஆகி இருப்பது குறித்து பலரும் வைரலாகி பேசிவருகின்றனர். மேலும் இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரி

குறிப்பாக ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர், காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்கு பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ்.

மூன்றில் ஒரு பங்காக குறையும் ஆப்ஸ் எண்ணிக்கை.. Google/Apple நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை.. என்ன காரணம்?மூன்றில் ஒரு பங்காக குறையும் ஆப்ஸ் எண்ணிக்கை.. Google/Apple நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை.. என்ன காரணம்?

சொன்னது போல் உலகம் முழுவதும் அ

முன்பு சொன்னது போல் உலகம் முழுவதும் அதிக மக்கள் இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் உலகின் ஒவ்வொருமூலையிலும் இருக்கும் இடங்களை விரல் அசைவில் நம்மால் காணவும் இது வழிவகுக்கிறது. பின்பு சாலைகள் மட்டுமல்லாது தெருக்கள் மற்றும்வீடுகளையும் நம்மால் இந்த அதிநவீன தொழில்நுட்பம் மூலம் காண முடியும்.

ஆப்பிள் எக்ஸ்டரா எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடி!ஆப்பிள் எக்ஸ்டரா எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடி- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் தள்ளுபடி!

 அமெரிக்காவில் ஓஹியோ

இருந்தபோதிலும் அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள புறநகர் பகுதியில் இருக்கும் வீடு ஒன்றை மட்டும் நம்மால் கூகுள் மேப் மூலம்
பார்க்க முடியாது. காரணம் என்னவென்றால் அது கூகுள் மேப்பில் சற்று மங்கலாக தெரிகிறது.

ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்!ஏலியன்ஸ் இருக்கா? இது எப்படி வந்துச்சு?- செவ்வாய் கிரகத்தில் இருந்த கதவு வாசல்: நாசா ரோவர் எடுத்த புகைப்படம்!

ங்கலாக தெரிகிற வீட்டிற்கு சொந்தகாரர்

இந்த மங்கலாக தெரிகிற வீட்டிற்கு சொந்தகாரர் எரியல் காஸ்ட்ரோ என்பவர் தான். கடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்த வீட்டில் வசித்துவந்த காஸ்ட்ரோ 2002 மற்றும் 2004-ம் ஆண்டுகளில் 3 பெண்களை கடத்தி தனது வீட்டிற்குள் அடைத்து வைத்திருக்கிறார்.

என்னா மனுசன்யா., ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.3.87 லட்சம் போனஸ்- முதலாளி சொன்ன காரணம் இருக்கே அடடா!என்னா மனுசன்யா., ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.3.87 லட்சம் போனஸ்- முதலாளி சொன்ன காரணம் இருக்கே அடடா!

 காஸ்ட்ரோவிற்கு

எனவே இதன் காரணமாக கைது செய்யப்பட்ட காஸ்ட்ரோவிற்கு 1000 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது அமெரிக்க நீதிமன்றம். குறிப்பாக தண்டனை காலத்தின்போது அவருக்கு பரோல் வழங்கப்படாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர்.

இறந்த மனிதனின் கண்களை இயங்க வைத்த விஞ்ஞானிகள்.. முதல் முறையாக இது எப்படி சாத்தியமானது?இறந்த மனிதனின் கண்களை இயங்க வைத்த விஞ்ஞானிகள்.. முதல் முறையாக இது எப்படி சாத்தியமானது?

தொடர்ந்து ஏரியல் காஸ்ட்ரோ

மேலும் இதை தொடர்ந்து ஏரியல் காஸ்ட்ரோ தங்கியிருந்த வீட்டை நகர நிர்வாகம் இடித்து தரைமட்டமாக்கியது. இருந்தபோதிலும் வீடு இருந்த இடம் கூகுள் மேப்பால் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு மங்கலாக தெரிகிறது. அதேபோல் குறிப்பிட்ட இடங்களை இப்படி மறைப்பது கூகுள் மேப்பில் புதிதல்ல. அதாவது குற்றப் பின்னணி அல்லது சர்ச்சையான இடங்கள் சில கூகுள் மேப்பில் ஏற்கனவே ப்ளர் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ல் சமீபத்தில் கூகுள் மேப்ஸ் வசதியில்

அதேபோல் சமீபத்தில் கூகுள் மேப்ஸ் வசதியில் சுங்கக் கட்டணத்தை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் வசதி, கட்டணமில்லா பாதை,சிக்னல்களில் இருக்கும் விளக்குகள் போன்ற பல அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்தது. குறிப்பாக இந்த அம்சங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
house on normal street is blurred on Google Maps: what is the reason?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X