இலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவுடன் 300 ஜிபி டேட்டா! பிஎஸ்என்எல் இன் சூப்பர் ஸ்டார் 300 திட்டம்!
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய சூப்பர் ஸ்டார் 300 என்ற அன்லிமிடெட் டேட்டா ஆப்டிக் பைபர் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்துடன் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் 300 திட்டம்
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த சூப்பர் ஸ்டார் 300 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு, வினாடிக்கு 50 எம்.பி என்ற வேகத்தில் 300ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அன்லிமிடெட் டேட்டா நிறைவடைந்தவுடன் 2 எம்.பி வேகத்தில் பயனர்களுக்கு டேட்டா சேவை வழங்கப்படும்.

இலவச ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா
இந்த சூப்பர் ஸ்டார் 300 திட்டத்துடன் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு, ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. இதை பயனப்டுத்தி பயனர்கள் ஹாலிவுட் படங்கள், சீரியல்கள் மற்றும் கிரிக்கெட் நிகழ்ச்சிகள் அனைத்தையும் தடை இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தைப் பெறுவதற்குப் இதை செய்யுங்கள்
இந்தியாவில் உள்ள அனைத்து வட்டார பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இந்த சூப்பர் ஸ்டார் 300 திட்டம் மற்றும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தைப் பெறுவதற்குப் பயனர்கள் ஆன்லைன் இல் பதிவு செய்ய வேண்டும் அல்லது டோல் பிரீ எண்ணிற்கு டயல் செய்து பதிவு செய்ய வேண்டும்.

வேர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டி
வேர்ல்ட் கப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் பிஎஸ்என்எல் நிறுவனம் கைகோர்த்துக்கொண்டுள்ளது சந்தோஷமளிப்பதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

விரைவில் பல புதிய திட்டங்கள்
பிஎஸ்என்எல் பயனர்களுக்குக் கூடுதல் சேவையை வழங்க பிஎஸ்என்எல் நிறுவனம் இதுபோன்ற பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் எனவும் பிஎஸ்என்எல் தலைவர் அனுபம் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications