பலே சைபர் போலீஸ்: குழந்தைகள் ஆபாச படம் விவகாரம்., தொடரும் கைது: சென்னை ஓட்டல் ஊழியர் சிக்கிய விவரம்
என்.சி.எம்.இ.சி, என்ற அமைப்பு இந்திய தேசிய குற்றப் பதிவு பணியகத்துக்கு அறிக்கை ஒன்று அனுப்பியது. 1984 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸால் நிறுவப்பட்ட அமைப்பு தான் என்.சி.எம்.இ.சி. இந்த அமைப்பானது குழந்தைகள் தொடர்பான பிரச்னைகள், குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள், குழந்தைகள் துன்புறுத்துப்படுவதில் இருந்து தடுப்பதற்காக தொடங்கப்பட்ட லாப நோக்கற்ற அமைப்பாகும்.

குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை
இந்த அமைப்பு குறித்து இந்திய உள்துறை அமைச்சக வட்டாரம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு இந்திய அரசு என்.சி.எம்.இ.சி அமைப்புடம் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அது, வருடந்தோறும் இந்தியாவில் குழந்தைகள் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த அமைப்பிடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும்.

25,000 குழந்தைகள் ஆபாசப்படம்
இந்த நிலையில் என்.சி.எம்.இ.சி அமைப்பு ஜனவரி 23 ஆம் தேதி வரையிலான இந்திய குழந்தைகள் பாதிப்பு குறித்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் ஜனவரி 23 ஆம் தேதிவரை, கடந்த ஐந்து மாதங்களில் 25,000 குழந்தைகள் ஆபாசப்படம் இந்தியாவில் இருந்து பல்வேறு இணையதளங்களில் பதிவேற்றம் செய்து உலாவருவதாக தெரிவித்துள்ளது.

டெல்லியில் தான் அதிகம்
இதிலும் இந்த பதிவேற்றமானது டெல்லியில் தான் அதிகம் நடந்துள்ளதாக என்.சி.எம்.இ.சி அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்தக்கட்டமாக மகாராஷ்டிரா, குஜராத், உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் அது அரங்கேறியுள்ளது.

ஆபாச படம் பதிவேற்றம் தொடர்பாக ஒருவர் கைது
இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ஆபாச படம் பதிவேற்றம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிறுவர்கள் தொடர்பான ஆபாச படங்களை சமூகவலைதளங்களில் பரவவிட்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

18 வயதுக்கு கீழ் உள்ளவர் என தகவல்
சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் கொடுத்த தகவலின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் சோராப் தாலுக்காவில் வசித்து வந்தவர் என்றும் அவர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐபி அட்ரஸ் மற்றும் மொபைல் கால் ரெக்கார்ட்
போலீஸார் கைது செய்து விசாரணை கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பல இணையத்தில் ஆபாச படம் பதிவேற்றம் தொடர்பாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவரது ஐபி அட்ரஸ் மற்றும் மொபைல் கால் ரெக்கார்ட் மூலம் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து இவரை போலீஸார் கைதுள்ளனர்.

தனியார் உணவகத்தில் பணி புரிந்து வருபவர் கைது
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி வயது 35. இவர் சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறையில் தனது சொந்த ஊரான மாராப்பாளையத்திற்கு சென்றுள்ளார்.

செல்போன் மூலம் போலி கணக்கு
அந்த நேரத்திலல் சென்னையில் உள்ள சமூக ஊடகவியல் பிரிவு போலீஸார் குருசாமி செல்போன் மூலம் போலி கணக்கு தொடங்கி குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குருசாமி கண்காணித்த நாமக்கல் சைபர் கிரைம் போலீஸார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications