வந்தாச்சு ஹானர் எக்ஸ்8: 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமரா அமைப்பு: அம்சங்கள் இதோ!

|

ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும். சமீபகாலமாக ஸ்மார்ட்போன்கள் பயன்பாடும் அதன் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றுதான் குறிப்பிட வேண்டும். ஹானர் நிறுவனம் பல்வேறு விலைப் பிரிவுகளில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ஹானர் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்கலாம். ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமராக்கள் அமைப்புடன் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கலாம். ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது மார்ச் 17 முதல் UAE சந்தையில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி

ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி

ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது சீன பிராண்டின் சமீபத்திய மாடலாக அறிமுகமானது. புதிய ஹானர் போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவாட் ரியர் கேமராக்கள் உடன் வருகிறது. ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி மற்றும் 6 ஜிபி ரேம் வசதியோடு வருகிறது. இந்த பிராம்ட் ஆனது தனியுரிம ஹானர் ரேம் டர்போ தொழில்நுட்ப ஆதரவோடு வருகிறது. ரேம் விரிவாக்க வசதி இந்த சாதனத்தில் இருக்கிறது. ஹானர் எக்ஸ் 8 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 7.45 மிமீ மெல்லிய உடல் மற்றும் 22.5 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. 10 நிமிட சார்ஜிங்கில் மூன்று மணிநேரம் வரை வீடியோ ப்ளேபேக் அம்சம் இதில் இருக்கிறது.

ஹானர் எக்ஸ்8 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ஹானர் எக்ஸ்8 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ஹானர் எக்ஸ்8 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது மார்ச் 17 முதல் UAE சந்தையில் முன்கூட்டிய ஆர்டர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஓசனஅ ப்ளூ, மிட்நைட் ப்ளாக் மற்றும் டைட்டாணியம் சில்வர் வண்ண விருப்பத்தோடு வருகிறது. ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனின் உலகளாவிய அறிமுகம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஹானர் எக்ஸ்8 விவரக்குறிப்புகள்

ஹானர் எக்ஸ்8 விவரக்குறிப்புகள்

ஹானர் எக்ஸ்8 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இது டூயல் சிம் (நானோ) ஆதரவோடு வருகிறது. ஹானர் எக்ஸ்8 ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான மேஜிக் யுஐ 4.2 இல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 19.9:9 விகிதத்துடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,388 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 680 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ஷூட்டர், 64 எம்பி முதன்மை கேமார கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. பின்புற கேமராவின் அமைப்பில் டெப்த் சென்சார் மற்றும் மேக்ரோ ஷூட்டர் வசதியைக் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என இந்த ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு

128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு

ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனானது 128 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு வருகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, ப்ளூடூத் வி5.2, யூஎஸ்பி டைப் சி போர்ட் உள்ளிட்டவைகள் உடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. ஹானர் எக்ஸ்8 ஸ்மார்ட்போனில் 22.5 வாட்ஸ் ஹானர் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

File images

Best Mobiles in India

English summary
Honor X8 Launched with Quad Rear Cameras, Snapdragon 680 SoC and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X