உயர்தர அம்சங்களோடு அறிமுகமான Honor X8 5G: ஆனா ஒரு சின்ன டுவிஸ்ட்!

|

ஹானர் நிறுவனம் Honor X8 5G ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. அதேபோல் Honor X8 5G ஸ்மார்ட்போன் 48 எம்பி டிரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் எக்ஸ்8 5ஜி அறிமுகம் செய்த ஹானர்

ஹானர் எக்ஸ்8 5ஜி அறிமுகம் செய்த ஹானர்

ஹானர் நிறுவனம் ஹானர் எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480+ எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 48 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் 22.5 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

Honor X8 5G விலை விவரங்கள்

Honor X8 5G விலை விவரங்கள்

Honor X8 5G ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போனானது மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை வைத்து பார்க்கும் போது இது பட்ஜெட் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honor X8 5G சிறப்பம்சங்கள்

Honor X8 5G சிறப்பம்சங்கள்

Honor X8 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது. பஞ்ச் ஹோல் வடிவமைப்புடன் 60Hz புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. அதேபோல் Honor X8 5G ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

48 எம்பி பிரதான கேமரா ஆதரவு

48 எம்பி பிரதான கேமரா ஆதரவு

Honor X8 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் இருக்கிறது. அதேபோல் செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி ஷூட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

22.5 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் ஆதரவு

22.5 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான மேஜிக் யுஐ 402 மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 22.5 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவு இருக்கிறது.

சர்வதேச அளவில் எப்போது கிடைக்கும்?

சர்வதேச அளவில் எப்போது கிடைக்கும்?

டூயல் சிம், 5G, 4G, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் வி5.2 ஆகிய இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி டைப்-சி போர்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. Honor X8 5G விலை விவரத்தை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது. சர்வதேச அளவில் கிடைக்கும் தன்மை குறித்து நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

புதிய டேப்லெட் அறிமுகம் செய்த ஹானர்

புதிய டேப்லெட் அறிமுகம் செய்த ஹானர்

அதேபோல் ஹானர் நிறுவனம் ஹானர் பேட் 8 எனப்படும் புதிய டேப்லெட்டை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஹானர் பேட் 8 ஆனது 2000 x 1200 பிக்சல் தீர்மானத்தை கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட்டில் 12 இன்ச் 2K LCD டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டேப்லெட் ஸ்னாப்டிராகன் 680 SoC மூலம் இயக்கப்படுகிறது. அதோடு இது 4 ஜிபி ரேம், 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என்ற வேரியண்ட்டில் 128 ஜிபி இன்டெரனல் வேரியண்ட் உடன் வெளியாகி இருக்கிறது.

ஹானர் பேட் 8 சாதனத்தில் 7250 எம்ஏஎச் பேட்டரி உடன் 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான மேஜிக் UI 6.1 மூலம் இயக்கப்படுகிறது.

50 எம்பி பிரதான கேமராவுடன் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்

50 எம்பி பிரதான கேமராவுடன் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்

முன்னதாக ஹானர் எக்ஸ்40ஐ ஸ்மார்ட்போன் மிட்ரேன்ஜ் விலைப் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலையை விரிவாக பார்க்கலாம்.

Honor X40i ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC, 50 MP பிரைமரி கேமரா, 4000mAh பேட்டரி, 40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் ஆஃப் ஃபீல்ட் கேமராவைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் இதன் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 8 எம்பி ஷூட்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

Honor X40i விலை என்ன தெரியுமா?

Honor X40i விலை என்ன தெரியுமா?

Honor X40i விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,599 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.19,000 ஆகும்.

அதேபோல் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,799 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.21,350 ஆகும். அதேபோல் 12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,999 ஆகும்.

இதன் இந்திய விலை மதிப்பு ரூ.23,700 ஆகும். Honor X40i ஆனது க்ரீன், ரோஸ் மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Honor X8 5G Launched with 48MP Primary Rear Camera, 5000mAh Battery

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X