Home
News

Honor X40i அறிமுகம்: கம்மி விலையில் 50எம்பி டூயல் கேமரா, 12 ஜிபி ரேம்!

பல்வேறு விலைப் பிரிவில் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்த ஹானர் நிறுவனம், சமீபகாலமாக அதன் வெளியீட்டை சுருக்கிவிட்டது. தற்போது ஹானர் நிறுவனம் ஹானர் எக்ஸ்40ஐ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட ஆதரவுகளுடன் வெளியாகி இருக்கிறது.

மேம்பட்ட ஆதரவுகளுடன் ஹானர் ஸ்மார்ட்போன்

மேம்பட்ட ஆதரவுகளுடன் ஹானர் ஸ்மார்ட்போன்

Honor X40i ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC, 50 MP பிரைமரி கேமரா, 4000mAh பேட்டரி, 40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வெளியாகி இருக்கிறது. Honor X40i ஸ்மார்ட்போனானது ப்ரீமியம் தர அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஹானர் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

Honor X40i விலை என்ன?

Honor X40i விலை என்ன?

Honor X40i ஸ்மார்ட்போனின் அம்சங்கள், விலை மற்றும் கிடைக்கும் தன்மையை விரிவாக பார்க்கலாம். Honor X40i விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,599 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.19,000 ஆகும். அதேபோல் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,799 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.21,350 ஆகும். அதேபோல் 12 ஜிபி ரேம் +256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை CNY 1,999 ஆகும். இதன் இந்திய விலை மதிப்பு ரூ.23,700 ஆகும்.

மூன்று வண்ண விருப்பங்கள்

மூன்று வண்ண விருப்பங்கள்

இந்த ஸ்மார்ட்போன் தற்போது சீனாவின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. Honor X40i ஆனது க்ரீன், ரோஸ் மற்றும் சில்வர் வண்ண விருப்பங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே, கேமரா, சிப்செட், பேட்டரி, சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பிற ஆதரவைகளை சற்று விரிவாக பார்க்கலாம்.

மேம்பட்ட டிஸ்ப்ளே ஆதரவுகள்

மேம்பட்ட டிஸ்ப்ளே ஆதரவுகள்

Honor X40i ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 1080 × 2388 பிக்சல் தீர்மானத்துடனான 6.7 இன்ச் ஃபுல் HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு 93.6% ஸ்க்ரீன் டு பாடி விகிதத்தை கொண்டிருக்கிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்

Honor X40i ஸ்மார்ட்போனானது ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் ஆதரவைக் கொண்டிருக்கிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன் 5 ஜிபி வரையிலான மெய்நிகர் ரேம் ஆதரவைக் கொண்டிருக்கிறது. Honor X40i ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை சற்று விரிவாக பார்க்கலாம்.

50 எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் புது ஸ்மார்ட்போன்

50 எம்பி டூயல் ரியர் கேமரா ஆதரவுடன் புது ஸ்மார்ட்போன்

Honor X40i ஸ்மார்ட்போனானது டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் ஆஃப் ஃபீல்ட் கேமராவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 8 எம்பி ஷூட்டர் பொருத்தப்பட்டுள்ளது.

40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

Honor X40i ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான மேஜிக் UI 6.0 மூலம் இயங்குகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 40W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இதில் இருக்கிறது.

சர்வதேச அளவில் எப்போது கிடைக்கும்?

சர்வதேச அளவில் எப்போது கிடைக்கும்?

தொடர்ந்து டூயல் சிம், 5G, 4G, ப்ளூடூத் v5.1, வைஃபை 802.11 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. யூஎஸ்பி டைப் சி போர்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யலாம். Honor X40i ஸ்மார்ட்போனின் எடை 175 கிராம் ஆகும். Honor X40i ஸ்மார்ட்போனானது சீனாவில் ஹானர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச அளவில் கிடைக்கும் தன்மை குறித்து நிறுவனம் இன்னும் அதிகார்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Pic Courtesy: Social media

Best Mobiles in India

English summary
Honor X40i Smartphone Launched with 50MP Primary Camera, 40W Fast Charging
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X