Home
News

பர்ஸ் வடிவில் ஸ்மார்ட்போன்னா? என்னப்பா சொல்றீங்க? கலக்கலான டிஸைனுடன் ஹானர் வி பர்ஸ்..

ஹானர் நிறுவனம் (HONOR) புதிய போல்டப்பில் ஸ்மார்ட்போன் சாதனங்களை IFA 2023 இல் வெளியிட்டது. அவற்றில் ஒன்று ஹானர் மேஜிக் வி2 என்ற பெயருடன் வருகிறது. இது விரைவில் உலகம் முழுவதும் வெளியிடப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

ஹானர் நிறுவனம் 'ஹானர் வி பர்ஸ் (Honor V purse)' என்ற தனித்துவமான கான்செப்ட் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பார்ப்பதற்கு ஒரு கைப்பையை போல இருக்கிறது. இதனால், இது ஹானர் வி பர்ஸ் (Honor V Purse) என்ற பெயருடன் வெளிவரவுள்ளது. ஹானர் V பர்ஸ் வெளிப்புறமாக மடிவதால் சற்று அசாதாரணமான தோற்றத்தை வழங்குகிறது.

பர்ஸ் வடிவில் ஸ்மார்ட்போன்னா? என்னப்பா சொல்றீங்க? கலக்கலான டிஸைன்..

ஹுவாய் (Huawei) நிறுவனம் ஆனது 2019 இல் ஹுவாய் மேட் எக்ஸ் (Huawei Mate X) உடன் ஒத்த வடிவமைப்பைக் கொண்டிருந்தது. இது ஒரு பெரிய வெளிப்புற டிஸ்பிளேவைக் காட்சியைக் கொண்டுள்ளது. இது மொபைலை மடிக்கும் போது மூடி, மென்மையான மேற்பரப்பை உருவாக்குகிறது. ஹானர் வி பர்ஸ் (Honor V Purse) போல்டபில் மொபைலை ஒரு ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்டாக மாற்றியமைத்துள்ளது.

இது ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேவுடன், இது பர்ஸ் போன்ற தோற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இது ஃபோனுடன் நகரும் செயின்ஸ் மற்றும் இதர சாதனங்களுடன் வருகிறது. நீங்கள் அதன் பட்டைகளை மாற்றி, வழக்கமான பணப்பை அல்லது கைப்பை போன்று அணியலாம். இது ஸ்மார்ட்போன் கலாச்சாரத்தை முழுமையாக மாற்றப்போகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த ஸ்மார்ட்போன் சாதனம் டிஸ்பிளேவை விரிக்க அனுமதிக்கிறது. இது ஒரு சிறிய பட்டனை கொண்டுள்ளது. ஹானர் வி பர்ஸ் சாதனமானது ஹுவாய் (Huawei) இன் மேட் எக்ஸ்எஸ் (Huawei Mate Xs) மற்றும் ஹுவாய் மேட் எக்ஸ்எஸ் 2 (Huawei Mate Xs 2) ஐ விட மெல்லியதாக உள்ளது. இதை மடிக்கும் போது 9 மிமீ குறைவான அளவோடு வருகிறது.

இது ஹுவாய் (Huawei) இன் டிஸ்பிளேகளை விட 20% மெலிதானதாகவும், மேஜிக் வி2 ஐ விட 10.1% மெல்லியதாகவும் இருக்கும். ஹானர் V பர்ஸை நிலைத்தன்மையை மனதில் கொண்டு வடிவமைத்துள்ளது. அதன் ஸ்ட்ராப்கள் வீகன் லெதர் உடன் வருகிறது. இது நீண்ட காலம் நீடிக்கும் ஃபேஷன் பாணியை மேம்படுத்துகிறது.

இது சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வுள்ள நுகர்வோர் வேகமாக ஃபேஷன் நுகர்வைக் குறைக்க உதவும். HONOR பல வன்பொருள் விவரங்களை வழங்கவில்லை, ஏனெனில் இது பெரிய அளவு உற்பத்திக்கானது அல்ல. இது பொதுமக்களுக்கு கிடைக்குமா என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது, ஏனெனில் முந்தைய கான்செப்ட் சாதனங்கள் யதார்த்தமாக மாற நீண்ட காலம் எடுத்தது என்பதை நாம் மறக்க முடியாது.

Best Mobiles in India

English summary
Honor V Purse Foldable Smartphone Getting Launch Soon With Big Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X