Home
News

பாப்-அப் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஹானர் ஸ்மார்ட் டிவி.!

ஹானர் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது, இந்நிலையில் பாப்-அப் ஏஐ செல்பீ கேமராவுடன் விரைவில் ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ஹூவாய் டெவலப்பர் மாநாடு வரும் ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது.

ஹூவாய் டெவலப்பர் மாநாட்டில்...

ஹூவாய் டெவலப்பர் மாநாட்டில்...

அந்த ஹூவாய் டெவலப்பர் மாநாட்டில் பாப்-அப் செல்பீ கேமராவுடன் ஹானர் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது, மேலும் இந்த சாதனத்தின் மென்பொருள் அம்சத்திற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே அம்சம்:

டிஸ்பிளே அம்சம்:

புதிய ஹானர் ஸ்மார்ட் டிவி 55-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

சிப்செட் வசதி :

சிப்செட் வசதி :

இந்த ஸ்மார்ட் டிவியில் Honghu 818 என்ற சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 4கே ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் 64 மெகாபிக்சல் படங்களை மிக அருமையாக டிகோட் செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள்:

புதிய தொழில்நுட்பங்கள்:

இந்த சாதனத்தில் உள்ள புதிய சிப்செட் வசதியின் சிறப்பம்சம் என்னவென்றால், மோஷன் காம்பன்சேஷன் (எம்இஎம்சி), ஹை டைனமிக் ரேஞ்ச் இமேஜிங் (எச்டிஆர்), சூப்பர்-ரெசல்யூஷன் (எஸ்ஆர்),நாய்ஸ் ரிடக்ஸன் (என்ஆர்),டைனமிக் கான்ட்ராஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் (டிசிஐ) உள்ளிட்ட ஏழு மேம்பட்ட பட செயலாக்க தொழில்நுட்பங்கள் உள்ளன.

ஸ்மார்ட் டிவியில் கேமரா

ஸ்மார்ட் டிவியில் கேமரா

ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கேமராவுடன் ஸமார்ட் டிவியை தயாரிக்க முழு அங்கீகாரத்தை வாங்கிவிட்டது, இந்நிலையில் ஹானர் நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவியில் கேமரா பொறுத்தி வெளியிடுவது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

5ஜி சார்ந்த தொழில்நுட்பம்

5ஜி சார்ந்த தொழில்நுட்பம்

மேலும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்னவென்றால், 5ஜி சார்ந்த தொழில்நுட்பம் மற்றும் மக்கள் இதுவரை பயன்படுத்தாத மென்பொருள் அம்சம் ஏஐ தொழில்நுட்பம்,HongMeng இயங்குதளம் போன்றவை கண்டிப்பாக மக்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
honor-tv-to-come-with-pop-up-camera-ai-based-honghu: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X