Home
News

ரூ.10,000 விலைப்பிரிவில் ஹானர் டேப் எக்ஸ் 7: எச்டி டிஸ்ப்ளே, அதிவிரைவு சார்ஜிங் அம்சம்!

ஹானர் டேப் எக்ஸ்7 சாதனம் சீனாவில் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு புறத்திலும் மெல்லிய பெசல்கள் உள்ளது. மேலும் கீழ் பகுதியில் தடிமனான பெசல் மற்றும் தடிமனான நெற்றிப்பகுதி உள்ளது. ஹானர் டேப் எக்ஸ்7 ஒரே வேரியண்ட் மற்றும் ஒரே வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. எல்டிஇ வெர்சன் அம்சத்தோடு டேப்லெட் வருகிறது.

ஹானர் டேப் எக்ஸ்7

ஹானர் டேப் எக்ஸ்7

ஹானர் டேப் எக்ஸ்7 சாதனமானது ஆக்டோ கோர் மீடியாடெக் எஸ்ஓசி உடன் இயக்கப்படுகிறது. மேலும் இந்த சாதனம் 8 இன்ச் எச்டி டிஸ்ப்ளே அம்சத்தோடு வருகிறது. இதில் மிகப்பெரிய பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. ஹானர் டேப் எக்ஸ் 7 விலை குறித்து பார்க்கையில், ஹானர் டேப் எக்ஸ் 7 விலையானது இந்திய மதிப்புப்படி ரூ.10,300 ஆக இருக்கிறது. இது வைஃபை வேரியண்ட் ஆதரவோடு 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு அம்சத்துடன் வருகிறது. அதேபோல் இதன் எல்டிஇ வேரியண்ட் இந்திய மதிப்புப்படி ரூ.13,700 ஆக இருக்கிறது.

ஒற்றை டார்க் ப்ளூ வண்ண விருப்பம்

ஒற்றை டார்க் ப்ளூ வண்ண விருப்பம்

ஹானர் டேப் எக்ஸ் 7 சாதனமானது ஒற்றை டார்க் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. வைஃபை வேரியண்ட் அம்சத்தோடு சீனாவில் ஹை ஹானர் ஸ்டோர்களில் வாங்கலாம். மேலும் நிறுவனம் ஹானர் டேப் எக்ஸ்7 சர்வதேச சந்தையில் கிடைக்கும் விவரங்கள் குறித்து நிறுவனம் குறிப்பிடவில்லை.

ஹானர் டேப் எக்ஸ்7 சிறப்பம்சங்கள்

ஹானர் டேப் எக்ஸ்7 சிறப்பம்சங்கள்

ஹானர் டேப் எக்ஸ்7 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது மேஜிக் யூஐ 4.0 ஆதரவுடனான ஆண்ட்ராய்டு 10 அம்சத்துடன் இயக்கப்படுகிறது. இது 8 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே அம்சம் மற்றும் 1280*800 பிக்சல் ரெசல்யூஷன் ஆதரவோடு வருகிறது. மேலும் டிஸ்ப்ளே அம்சம் குறித்து பார்க்கையில், இதில் 300 நிட்ஸ் பிரகாசத்துடன் வருகிறது.

ஆக்டோகோர் மீடியா டெக் ஹீலியோ பி22டி எஸ்ஓசி

ஆக்டோகோர் மீடியா டெக் ஹீலியோ பி22டி எஸ்ஓசி

இந்த சாதனம் ஆக்டோகோர் மீடியா டெக் ஹீலியோ பி22டி எஸ்ஓசி அம்சத்தோடு இயக்கப்படுகிறது. மேலும் இ்நத சாதனம் 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இதில் மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. அதேபோல் இதில் பின்புற கேமரா மற்றும் முன்புற ஒற்றை கேமரா அம்சத்தை கொண்டிருக்கிறது. இதில் 5 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் முன்புற கேமரா அம்சத்தை கொண்டிருக்கிறது.

ஹானர் டேப் எக்ஸ்7 இணைப்பு ஆதரவுகள்

ஹானர் டேப் எக்ஸ்7 இணைப்பு ஆதரவுகள்

ஹானர் டேப் எக்ஸ்7 இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் ஒய்5., மைக்ரோ யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுடன் வருகிறது. அதேபோல் இந்த டேப்லெட் 5100 எம்ஏஎச் பேட்டரி அம்சத்துடன் 10 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இந்த சாதனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய மூன்று மணிநேரம் மட்டுமே எடுக்கிறது. மேலும் இந்த சாதனத்தின் எடை 325 கிராம் ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Honor Tab X7 Launched With 8 Inch HD Display, 10W Fast Charging and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X