இந்தியாவில் ஹானர் 7எக்ஸ், லைட் 9 மீது சலுகைகள்; 3 நாட்களுக்கு மட்டுமே.!

குறிப்பாக ஹானர் 9 லைட் மீது 15% அளவிலான சூப்பர்கேஷ், அதாவது ரூ.3000/- மதிப்பிலான சலுகை கிடைக்கும். இதை அணுக மொபிவிக் வழியாக பணப்பரிவர்த்தனை நிகழ்த்த வேண்டுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

|

ஹானர் நிறுவனம், இந்தியாவில் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தள தொடக்கத்தின் 2-வது ஆண்டு நிறைவு விழாவை அறிவித்துள்ளது. இந்த கொண்டத்தையொட்டி ஹானர் தனது தயாரிப்புகளின் வரம்பில் உள்ள சாதனைகளுக்கு சில சுவாரஸ்யமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஹானர் 7எக்ஸ், லைட் 9 மீது சலுகைகள்; 3 நாட்களுக்கு மட்டுமே!

இன்று தொடங்கி (21 மார்ச்) மார்ச் 23 வரை செல்லுபடியாகும் இந்தச் சலுகையின்கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில், நிறுவனத்தின் ஹானர் 9 லைட் மற்றும் ஹானர் 7எக்ஸ் மீது சூப்பர்கேஷ் சலுகை கிடைக்கும்.

குறிப்பாக ஹானர் 9 லைட் மீது 15% அளவிலான சூப்பர்கேஷ், அதாவது ரூ.3000/- மதிப்பிலான சலுகை கிடைக்கும். இதை அணுக மொபிவிக் வழியாக பணப்பரிவர்த்தனை நிகழ்த்த வேண்டுமென்பதும் குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள ஹானர் 7எக்ஸ்-ன் 64ஜிபி மாறுபாடு மீது ரூ.2,000/- மதிப்பிலான கூப்பன்கள் கிடைக்கும். மற்றொரு கருவியான 32ஜிபி மாறுபாடு வாங்கினால் நிறுவனத்தின் பிராண்ட் மொபைல் கவர் இலவசமாக கிடைக்கும்.

இது தவிர, ரூ.1 ப்ளாஷ் விற்பனையின் கீழ் ஹானர் 8 ப்ரோ கேஸ்கள் தொகுக்கப்பட்டுள்ளன மற்றும் ஹானர் பாகங்கள் மீது 90% சதவிகிதம் வரை தள்ளுபடிகளும் கிடைக்கிறது. இந்த சலுகை வாய்ப்பின்கீழ், ஹானர் பவர் பேங்க் ஏபிஓ8க்யூ ஆனது ரூ.999/-க்கு வாங்க கிடைக்கிறது, இதன் ஸல் விலை ரூ.1,999/- ஆகுமென்பது குறிப்பிடத்தக்கது. உடன் ரூ.999/- மதிப்புள்ள ஹூவாய் க்விக் சார்ஜ் ஏபி32 ஆனது வெறும் ரூ.499/-க்கு வாங்க கிடைக்கிறது.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)

ஆக்சஸெரீஸ்களை பொறுத்தவரை, ரூ.29/-க்கு ஹானர் 8 லைட் கேஸ்கள், ரூ.29/- மற்றும் ரூ.99/-க்கு முறையே 6எக்ஸ் பிசி மற்றும் ப்ளிப் கேஸ்கள் ஆகியவைகள் வாங்க கிடைக்கும். ஸ்பின் & வின் போட்டியின் வழியாக, பயனர்களுக்கு தள்ளுபடி கூப்பன்களும் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Honor Store 2nd Anniversary Sale: Top offers on Honor 9 Lite, Honor 7X and more. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X