Home
News

HONOR AI: பேஸ்-டூ-பேஸ் டிரான்ஸ்லேஷன்.. AI எரைசர்.. AI நோட்ஸ்.. கூடவே சர்க்கிள்-டூ-சர்ச்ச்.. எந்த மாடல்களில்?

ஹானர் பிரியர்கள் அறக்க பறக்கும்படி கூகுள் நிறுவனத்துடன் கைகோர்த்து சர்க்கிள் டூ சர்ச்ச் பீச்சர் (Circle to Search Feature) மட்டுமல்லாமல், கூடவே ஹானர் ஏஐ ஆப் சார்டிங் (HONOR AI I App Sorting), ஹானர் பேஸ் டூ பேஸ் டிரான்ஸ்லேஷன் (HONOR Face to Face Translation), ஹானர் ஏஐ எரைசர் (HONOR AI Eraser) போன்ற பட்டையை கிளப்பும் ஏஐ பீச்சர்கள் களமிறக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஏஐ பீச்சர்கள் எந்த மாடல்களில் கிடைக்கும்?

கூகுள் நிறுவனம் சர்க்கிள் டூ சர்ச்ச், மேஜிக் எரைசர், ஜெமினி அசிஸ்டன்ட் போன்ற பல்வேறு ஏஐ பீச்சர்களை களமிறக்கியதில் இருந்து, ஒட்டுமொத்த மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது மாடல்களில் ஏஐ பீச்சர்களை களமிறக்க தொடங்கிவிட்டன. இப்போது, ஹானர் நிறுவனம் மூக்கில் விரல் வைக்கும்படியான ஏஐ பீச்சர்களை கொண்டு வந்துள்ளது.

HONOR AI: பேஸ்-டூ-பேஸ் டிரான்ஸ்லேஷன்.. கூடவே சர்க்கிள் டூ சர்ச்ச்!

ஹானர் மேஜிக் வி3 (HONOR Magic V3) போனில் ஏற்கனவே, ஹானர் ஏஐ ஆப் சார்டிங், ஹானர் பேஸ் டூ பேஸ் டிரான்ஸ்லேஷன், ஹானர் ஏஐ எரைசர், ஹானர் ஏஐ நோட்ஸ் (AI HONOR Notes) போன்ற பீச்சர்கள் கொடுக்கப்பட்டது. இப்போது, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து சர்க்கிள் டூ சர்ச்ச் பீச்சரையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த பீச்சர் ஹானர் 200 சீரிஸ் போன்களிலும் வர இருக்கிறது.

சர்க்கிள் டூ சர்ச்ச் பீச்சரை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால், ஹானரில் மீதமுள்ள பீச்சர்களை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், மொபைலில் இப்படிப்பட்ட பீச்சர்கள் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லக்கூடியது. முதலில் ஹானர் பேஸ் டூ பேஸ் டிரான்ஸ்லேஷன் பீச்சரை பற்றி தெரிந்து கொள்வோம். இதில் டிரான்ஸ்லேஷன் செய்யலாம்.

HONOR AI: பேஸ்-டூ-பேஸ் டிரான்ஸ்லேஷன்.. கூடவே சர்க்கிள் டூ சர்ச்ச்!

ஆனால், வீடியோ காலிங் போது, வேறு மொழியில் பேசுபவரின் வார்த்தைகளை நொடிக்கு நொடி உங்களது மொழியில் மாற்றம் செய்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல், டெக்ஸ்ட் மற்றும் வாய்ஸ் ஆகியவற்றையும் மொழிப்பெயர்ப்பு செய்து கொள்ளலாம். லோவ்-லேட்டன்சி டிரான்ஸ்லேஷன் (Low-latency Translation) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, தாமதமின்றி மொழிப்பெயர்ப்பு செய்யலாம்.

ஹானர் ஏஐ எரைசர் பீச்சரை பார்க்கையில், கூகுள் நிறுவனத்தின் மேஜிக் ஏரைசர் பீச்சரை போலவே இருக்கிறது. நீங்கள் எடுக்கும் போட்டோக்களில் தேவையில்லாத ஆப்ஜெக்ட்களை எளிதாக நீக்கி கொள்ளலாம். இதற்கு அந்த ஆப்ஜெக்ட் மீது ஒரு சர்க்கிள் செய்தால் போதும், இருந்த இடம் தெரியாமல் எரைஸ் செய்யப்பட்டுவிடும். இது கேமரா பிரியர்களுக்கு பக்காவான பீச்சராகும்.

இப்போது, ஹானர் ஏஐ நோட்ஸ் பீச்சரை பற்றி பார்க்கலாம். இந்த பீச்சர் மூலம் நீங்கள் கான்பிரன்ஸ் உரையாடல், செமினார் உரையாடல் போன்றவற்றை எந்த மொழியில் கேட்டாலும், அதை உங்களது மொழியில் நோட்ஸ் எடுத்து கொள்ள முடியும். அவர்கள் பேச பேச இந்த நோட்ஸ் உங்களது மொழியில் டெக்ட்ஸ்களை பதிவு செய்து கொள்ளும். இந்த ஏஐ பீச்சர்களை ஹானர் கொடுத்துள்ளது.

ஹானர் மேஜிக் வி3 அம்சங்கள் (HONOR Magic V3 Specifications): இதுவொரு போல்டபிள் மாடலாகும். இன்னர் மற்றும அவுட்டர் என்று 2 டிஸ்பிளேக்களை கொண்டிருக்கிறது. 7.92 இன்ச் இன்னர் டிஸ்பிளேவில் ஓஎல்இடி டிஸ்பிளே, ஃபுல்எச்டிபிளஸ் ரெசொலூஷன், 120Hz ரெப்ஃரெஷ் ரேட், எச்டிஆர்10 பிளஸ் மற்றும் டால்பி விஷன் போன்ற பீச்சர்கள் வருகின்றன.

6.43 இன்ச் ஓஎல்இடி அவுட்டர் டிஸ்பிளே உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் உள்ளது. 50 மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா + 40 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. 20 எம்பி ஸ்மார்ட் ஆங்கள் செல்பீ ஷூட்டர் உள்ளது. 5150mAh பேட்டரி, 66W வயர்டு சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. ரூ.1,03,645ஆக ஆரம்ப விலை இருக்கிறது.

Image Source: HONOR

Best Mobiles in India

English summary
HONOR Rolls Out Circle to Search on Magic V3 With AI App Sorting Face to Face Translation AI Eraser
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X