Home
News

ஆளுக்கொரு ஆர்டர் போடலாம்.. ரூ.13,999 விலைக்கு 7GB ரேம்.. 7250mAh பேட்டரி.. 6 ஸ்பீக்கர்கள்.. எந்த டேப்லெட்?

இந்தியா மார்கெட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் ஹானர் (Honor) நிறுவனம் மீண்டும் காலடி எடுத்து வைப்பதால், அந்த மார்கெட்டே அதிரும்படி பிரம்மாண்ட அம்சங்களை கொண்ட ஹானர் பேட் எக்ஸ் 9 (Honor Pad X9) டேப்லெட்டை மிகவும் மலிவான விலைக்கு களமிறக்கியிருக்கிறது.

நம்மில் பலருக்கு டேப்லெட் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், நல்ல அம்சங்களுடன் கூடிய டேப்லெட்கள் கம்மியான பட்ஜெட்டில் கிடைப்பது குதிரை கொம்பாகவே இருக்கிறது. அதுவும் கம்பெனி டேப்லெட் வாங்க வேண்டும் என்றால், குறைந்தது ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் பணம் தேவைப்படும்.

ரூ.13,999 விலைக்கு 7GB ரேம்.. 7250mAh பேட்டரி.. எந்த டேப்லெட்?

இதனால், நிறைய பேர் ஆஃபர் விலையில் நல்ல டேப்லெட் கிடைக்கும் வரை காத்திருந்து வாங்க முடிவு செய்திருப்பார்கள். இவர்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 7 ஜிபி ரேம், 7,250mAh பேட்டரி, 6 ஸ்பீக்கர்கள் என்று பிரம்மாண்ட அம்சங்களுடன் ஹானர் பேட் எக்ஸ் 9 டேப்லெட் விற்பனைக்கு வந்துள்ளது.

ஹானர் பேட் எக்ஸ் 9 அம்சங்கள் (Honor Pad X9 Specifications): இந்த ஹானர் டேப்லெட் 11.5 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) டிஎஃப்டி எல்சிடி ஐபிஎஸ் (TFT LCD (IPS)) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2K ரெசொலூஷன் வருகிறது.

ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மேஜிக்ஓஎஸ் 7.1 (MagicOS 7.1) கொண்ட ஸ்னாப்டிராகன் 685 (Snapdragon 685) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஹானர் பேட் 4 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

மொத்தமாக 7 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வருகிறது. 5 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் எச்டிஆர் (HDR), டைம் லேப்ஸ் (Time-Lapse), செல்பீ மிரரிங் (Selfie Mirroring) உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன.

22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 7,250mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 13 மணி நேரத்துக்கு பேக்கப் கிடைக்கும். இதற்கு டைப் - சி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டேப்லெட்டின் ஆடியோவை பொறுத்தவரையில், 1 மைக் மற்றும் 6 ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கிரிஸ்டர் கிளியர் சவுண்டிங் அனுபவதுக்காக ஹானர் ஹிஸ்டென் (HONOR Histen) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆக்சிலரேட் சென்சார் (Accelerate Sensor) மற்றும் கிரேவிட்டி சென்சார் (Gravity Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ப்ளூடூத் பிடி5.1 (Bluetooth BT5.1), வைபை 5,801.11 (WIFI 5,802.11) கனெக்டிவிட்டி வருகிறது. மொத்தமாக 499 கிராம் எடைக் கொண்டுள்ளது.

267.3 மிமீ நீளம், 167.4 மிமீ உயரம், 6.9 அகலம் கொண்டுள்ளது. குறிப்பாக மெட்டல் பாடி கொண்டிருப்பதால், ப்ரீமியம் பீல் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஹானர் பேட் எக்ஸ் 9 ஸ்பேஸ் கிரே (Space Grey) கலரில் விற்பனைக்கு வருகிறது.

இந்த டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.14,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் இன்று (ஜூலை 29) ப்ரீ-புக்கிங் தொடங்குகிறது. இப்போது புக்கிங் செய்தால், ரூ.14,499 விலையில் அறிமுக சலுகையாக ரூ.500 தள்ளுபடி கிடைக்கும்.

இதன் மூலம் ரூ.13,999 க்கு பட்டாசான அம்சங்களை கொண்ட டேப்லெட்டை வாங்கிக்கொள்ள முடியும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Pad X9 Pre-Booking Starts On Amazon Sales From August 2 Specifications, Price in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X