Home
News

ஒரே போடு.. ரூ.9,000க்கு லெனோவா.. ரூ.13,500க்கு ஹானர்.. அமேசான் ஆஃபரில் பிச்சிக்கிட்டு போகும் டேப்லெட்ஸ்!

அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேல் (Amazon Great Freedom Sale) விற்பனையில் லெனோவா டேப் எம்9 மற்றும் ஹானர் பேட் எக்ஸ் 9 ஆகிய இரண்டு டேப்லெட்களும் நம்ப முடியாத தள்ளுபடி விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றின் அம்சங்கள், தள்ளுபடி விவரங்கள் இதோ.

லெனோவா டேப் எம்9 அம்சங்கள் (Lenovo Tab M9 Specifications): இந்த டேப்லெட் 9 இன்ச் (1340 x 800 பிக்சல்கள்) எச்டி ஐபிஎஸ் (HD IPS) டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராட்டு 12 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 12என்எம் (Octa Core MediaTek Helio G80 12nm) சிப்செட் கொண்டுள்ளது.

அமேசான் ஆஃபரில் பிச்சிக்கிட்டு போகும் 2 டேப்லெட்ஸ்!

அதோடு மாலி ஜி52 ஜிபியு (Mali G52 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த டேப்லெட்டுக்கு 3 வருடத்துக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் ப்ரீயாக கொடுக்கப்படுகிறது. 8 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது.

மேலும், 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. இந்த டேப்லெட் பேட்டரியுடன் சேர்ந்து 344 கிராம் எடைக் கொண்டுள்ளது. ப்ரோஸ்ட் கிரே (Frost Grey) மற்றும் ஸ்டோர்ம் ப்ளூ (Storm Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

இதன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆகவும், 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ரூ.9,999 மதிப்புள்ள மாடலுக்கு ரூ.999 தள்ளுபடியும், ரூ.13,999 மதிப்புள்ள மாடலுக்கு ரூ.1,399 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ஹானர் பேட் எக்ஸ் 9 அம்சங்கள் (Honor Pad X9 Specifications): இந்த டேப்லெட் 11.5 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) எல்சிடி ஐபிஎஸ் (LCD IPS) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2K ரெசொலூஷன் வருகிறது.

ஆண்ட்ராய்ட் 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஸ்னாப்டிராகன் 685 (Snapdragon 685) சிப்செட் வருகிறது. அதோடு அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ஹானர் பேட் டேப்லெட்டில் 4 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) வருகிறது.

ஆகவே, 7 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த டேப் 5 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கிறது. இந்த டேப்லெடில் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7,250mAh பேட்டரி வருகிறது. அதோடு 1 மைக் மற்றும் 6 ஸ்பீக்கர்கள் வருகின்றன.

மேலும், ப்ளூடூத் பிடி 5.1, வைபை 5,801.11 கனெக்டிவிட்டி வருகிறது. இந்த டேப்லெட் பேட்டரியுடன் சேர்த்து மொத்தமாக 499 கிராம் எடைக் கொண்டுள்ளது. மெட்டல் பாடி கொண்டிருப்பதால், ப்ரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே (Space Grey) கலரில் மட்டும் விற்பனைக்கு வருகிறது.

இந்த டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, அமேசானில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. அந்த வகையில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலுக்கு ரூ.1,499 தள்ளுபடி பெற்றுக் கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor Pad X9 And Lenovo Tab M9 Offers On Amazon Great Freedom Sale Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X