இருந்தாலும் ரொம்ப கம்மி விலை: ஹானர் 9 ஏ 5000 எம்ஏஎச் பேட்டரி, 13 எம்பி கேமரா!

|

ஹானர் 9 ஏ ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஹெச் பேட்டரி, 13 எம்பி ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களோடு மலிவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹானர் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

ஹானர் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

ஹானர் நிறுவனத்தின் பட்ஜெட் விலை போனான புதிய மாடல் ஹானர் 9 ஏ ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் 3ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,840 ஆகும். சீன விற்பனை முன்பதிவு ஜூலை 1 முதல் தொடங்கும் எனவும் அங்கு அதன் விலை ரூ.11,350-க்கு நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது இந்த ஸ்மார்ட்போன் இந்திய அறிமுகம் குறித்து தெரியவில்லை.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போன் மாடலானது 6.3-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600x720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையை கொண்டுள்ளது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ

ஹானர் 9ஏ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. ஹானர் 9ஏ சாதனத்தில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, கூடுதலாக மெமரி நீட்டிப்புக்கு மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும் வசதி இதில் உள்ளது.

13 எம்பி பிரைமரி லென்ஸ்

13 எம்பி பிரைமரி லென்ஸ்

ஹானர் 9 ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்பி பிரைமரி லென்ஸ் + 5 எம்பி அல்ட்ரா லென்ஸ் கேமரா+ 2 எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் அடக்கம். மேலும் 8 எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்ச ஆதரவுகள் இதில் உள்ளன.

சீன ஆப்களை விடுங்க மக்களே.! சீன ஆப்களுக்கு மாற்றாக இருக்கும் ஆப்களின் பட்டியல் இதோ.!சீன ஆப்களை விடுங்க மக்களே.! சீன ஆப்களுக்கு மாற்றாக இருக்கும் ஆப்களின் பட்டியல் இதோ.!

4 ஜி வோல்டிஇ

4 ஜி வோல்டிஇ

அதோடு 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

இதில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளாக், புளூ மற்றும் கிரீன் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.

Best Mobiles in India

English summary
Honor launched new model honor 9A smartphone with budget price., here the specification and price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X