Home
News

HONOR ஆரம்பிச்சிருச்சு.. ஸ்மார்ட்போனில் DeepSeek R1.. YOYO அசிஸ்டன்ட்.. இனிமே தூக்கிசாப்பிடும்!

அமெரிக்க டெக் ஜாம்பவான்களையே திக்குமுக்காட செய்த டீப்சீக் ஏஐ (DeepSeek AI) மாடலானது, இனிமேல் நேரடியாக மொபைலில் ஒருங்கிணைக்கப்பட இருக்கிறது. அதிலும் ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்டுடன் (AI Voice Assistant) கிடைக்க இருக்கிறது. ஹானர் (HONOR) நிறுவனம் இதை உறுதி செய்திருக்கிறது. எந்தெந்த ஹானர் போன்களில் டீப்சீக் ஏஐ ஒருங்கிணைக்கப்படுகிறது? முதலில் எந்த நாடுகளில் இந்த ஏஐ மாடல் கொண்ட போன்களை பயன்படுத்தலாம்? உள்ளிட்ட முழு விவரங்களை இப்போது தெரிந்த கொள்ளலாம்.

சாட்ஜிபிடி வருகைக்கு பிறகு ஜெமினி ஏஐ, மெட்டா ஏஐ, கோபைலட் போன்ற போட்டி ஏஐ மாடல்களும் வந்துவிட்டன. ஆனால், சாட்ஜிபிடி மட்டுமே உச்சத்தில் இருந்தது. இது அமெரிக்காவின் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் ஏஐ மாடலாக இருப்பதால் போட்டிக்கு ஆளில்லை என்றே டெக் உலகம் நினைத்தது. ஆனால், சீனாவின் டீப்சீக் அதை தவிடுபொடியாக்கி விட்டது.

HONOR ஆரம்பிச்சிருச்சு.. ஸ்மார்ட்போனில் DeepSeek R1.. YOYO அசிஸ்டன்ட்!

சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளியது மட்டுமல்லாமல், டெக் நிறுவனங்களின் ஷேர்களின் விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், உலக நாடுகள் ஏஐ மாடல்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவிலும் புது ஏஐ மாடல் உருவாகி வருகிறது. சில மாதங்களில் வெளியாகும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

இந்த நேரத்தில் டீப்சீக் ஏஐ அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டது. ஹானர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. ஆகவே, ஹானர் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் டீப்சீக் ஆர்1 (DeepSeek R1) மாடல் ஒருங்கிணைக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் யோயோ அசிஸ்டன்ட் (YOYO Assistant) மூலம் இந்த டீப்சீக் ஆர்1 மாடலை பயன்படுத்தலாம். எந்தெந்த மாடல்களில் கிடைக்கிறது?

மேஜிக்ஓஎஸ் 8.0 (MagicOS 8.0) அல்லது அதற்கு பிறகு வந்த ஓஎஸ்களை கொண்ட ஹானர் மாடல்களில் இந்த டீப்சீக் ஆர்1 ஏஐ மாடலை பயன்படுத்த முடியும். இப்போதைக்கு சீனாவில் மட்டும் பயன்படுத்த கிடைக்கிறது. இந்தியாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹானர் புதிய மாடல்களை களமிறக்க தொடங்கிவிட்டது. இப்போது பல்வேறு மாடல்கள் கிடைக்கின்றன.

ஆகவே, சீனாவுக்கு அடுத்த இந்தியாவிலும் டீப்சீக் ஏஐ ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் களமிறக்கப்படலாம். யோயோ வாய்ஸ் அசிஸ்டன்ட் பொறுத்தவரை ஏற்கனவே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும், ஜெனிமி ஏஐ போலத்தான். அதாவது, கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் உடன் இந்த ஜெமினி ஏஐ ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு கிடைக்கிறது.

இதேபோல போலத்தான் யோயோ அசிஸ்டன்ட் உடன் டீப்சீக் ஆர்1 ஒருங்கிணைப்பு செய்யப்பட்டு கிடைக்கும். டீப்சீக் ஏஐ மாடலுக்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியா, இத்தாலி மற்றும் தைவான் போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகள் தடை செய்ய இருக்கின்றன.

அமெரிக்காவிலும் தடை செய்வதற்காக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நேரத்தில் ஸ்மார்ட்போன்களில் ஒருங்கிணைப்பு செய்யும் நடவடிக்கையில் டீப்சீக் ஈடுபட்டுள்ளது. இந்தியா, சிங்கப்பூர், இந்தோனிசியா போன்ற பல்வேறு ஆசிய நாடுகளில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், டீப்சீக் ஏஐ அந்த போன்களில் வரலாம்.

அல்லது தடை செய்யப்பட்ட நாடுகளில் கிடைக்காமலும் போகலாம். இந்தியாவை பொறுத்தவரையில் கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ, மெட்டா நிறுவனத்தின் மெட்டா ஏஐ மற்றும் ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி அதிகமாக பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் பெரும்பாலான கஸ்டமர்களிடையே சென்று சேர்ந்துவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HONOR integrates DeepSeek-R1 into YOYO Assistant With MagicOS 8 0 in China Check HONOR Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X