சூப்பர் கிளைமாக்ஸ்.. மீண்டும் இந்தியாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல பிராண்டு.. யார் தெரியுமா?
இந்தியாவைவிட்டு வெளியேற்றப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனமாக ஹானர் (Honor) நிறுவனம் திகழ்கிறது. இந்தியாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பரந்த ஹானர் நிறுவனம், தற்போது தடையமே இல்லாமல் போய்விட்டது. இப்போது நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் ரீ-என்ட்ரி கொடுக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட்போன் பிரிவில் இந்தியாவில் மீண்டும் வர ஹானர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. ஹானர் செப்டம்பர் மாதத்திற்குள் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஹானர் 90 (Honor 90) என்ற சாதனத்துடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம். முன்னர் Huawei இன் துணை பிராண்டாக இருந்த ஹானர் (Honor), ஒரு காலத்தில் இந்திய சந்தையில் ஒரு நல்ல பங்கைக் கொண்டிருந்தது.

போட்டியாளர்கள் கைப்பற்றும் வரை வெற்றிகரமாக செயல்பட்டு வந்த நிறுவனம், கடந்த 2020 ஆம் அண்டில் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக எந்த புதிய ஸ்மார்ட்போன்களையும் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை. இருப்பினும், முன்னாள் ரியல்மி இந்தியா தலைவரான மாதவ் ஷெத் தலைமையில் இந்த பிராண்ட் இந்தியாவில் மீண்டும் வரத் திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹானர் 90 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகலாம் என்று வதந்திகள் ஏராளமாக பரவி வருகிறது. இந்த ஃபோன் அதன் உலகளாவிய மாறுபாட்டின் அதே விவரக்குறிப்புகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு குவாட்-கர்வுடு வடிவமைப்புடன், எமரால்டு கிரீன் நிறத்தில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
நாட்டில் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறி பல ஆண்டுகளுக்குப் பிறகு ஹானர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாக இருக்கலாம். தெரியாதவர்களுக்காக, Honor 90 ஆனது 6.7' இன்ச் கொண்ட 1.5K ரெசல்யூஷன் (1,200 x 2,664 பிக்சல்கள்) உடன் குவாட் கர்வுடு (வளைந்த) OLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.
இது 120Hz ரெஃப்ரஷ் ரேட், இந்த ஸ்மார்ட் போன் சாதனம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 சிப்செட் (Snapdragon 7 Gen 1) மூலம் இயக்கப்படுகிறது. ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 12 ஜிபி வரை ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. Honor 90 ஆனது 200MP கொண்ட பிரைமரி கேமராவுடன், 12MP + 2MP டெப்த் கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 50 மெகாபிக்சல் கொண்ட கேமராவை இது கொண்டுள்ளது. இந்த சாதனம் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MagicUI 7.1 இல் இயங்குகிறது. இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 6, Bluetooth v5.2, NFC, GPS, 5G மற்றும் USB-C போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
இந்த சாதனத்தில் பயோமெட்ரிக்ஸிற்கான இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. இந்தியாவில் ஹானர் நிறுவனம் 2013 இல் Huawei துணை பிராண்டாக அறிமுகமானது. இதன் செயல்பாடுகளை அடுத்த ஆண்டு 2014 இல் இந்தியாவில் தொடங்கியது. பின்னர் 2020 இல், Huawei ஹானர் பிராண்டை 30 முகவர்கள் மற்றும் டீலர்கள் கொண்ட கூட்டமைப்பிற்கு விற்றது.
அமெரிக்காவில் தோன்றிய பிராண்டுகளுடன் வணிகம் செய்வதைத் தடைசெய்த அமெரிக்கத் தடைகளால் Huawei ஒரு அடியை எதிர்கொண்ட நேரத்தில் இது நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹானர் உயிர்வாழ ஹவாய் பிராண்டை விற்க வேண்டியிருந்தது. இந்தியாவில் அறிமுகமான பிராண்டின் கடைசி ஸ்மார்ட்ஃபோன் 2020 ஆம் ஆண்டு வெளியான ஹானர் 9A சாதனமாகும்.
இது ரூ. 10,000 விலைக்கு கீழ் பட்ஜெட் சலுகை சாதனமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, பிராண்ட் எந்த ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்தவில்லை. இப்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு, நிறுவனம் ஹானர் 90 ஸ்மார்ட்போனுடன் வெளிவர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








