இது முடிவில்ல ஆரம்பம்- இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனம்?

|

உலகளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது கால் தடத்தை பதித்து வளர்ச்சியடைய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. காரணம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதால் டிமாண்ட் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஒரு பிரபல நிறுவனம் வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது.

இந்திய சந்தையை ஆக்கிரமிக்கும் நிறுவனங்கள்

இந்திய சந்தையை ஆக்கிரமிக்கும் நிறுவனங்கள்

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை பொறுத்தவரை போட்டிகள் என்பது மிக அதிகம். இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்த நிறுவனங்களில் பெரும்பாலானவை வெளிநாடுகளை சேர்ந்தது தான். இதில் அதிக நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தது. இதில் ஒரு சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் தான் இந்தியாவை விட்டு வெளியேற இருக்கிறது.

பலரிடமும் பிரபலமான பிராண்ட்

பலரிடமும் பிரபலமான பிராண்ட்

ஹானர் இந்தியாவில் புகழ்பெற்ற நிறுவனம் இல்லை என்றாலும் நல்ல பெயர்பெற்ற நிறுவனம் என்று தான் கூறவேண்டும். ஹானர் ஸ்மார்ட்போன்கள் என்பது பலரிடமும் பிரபலமான ஒன்று. இந்த நிலையில் ஹானர் இந்தியாவை விட்டு வெளியேறுவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

ஒரு வருடத்திற்கும் மேலாக செயலற்ற நிலை

ஒரு வருடத்திற்கும் மேலாக செயலற்ற நிலை

ஹானரின் ட்விட்டர் கணக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக செயலற்ற நிலையில் இருப்பதாகவும், சந்தையில் இருந்து நிறுவனம் வெளியேறியதே இதற்குக் காரணம் என்றும் ஒரு அறிக்கை கூறியது. பரவும் இந்த தகவல் குறித்து ஹானர் தரப்பில் இருந்து பதில் வெளியாகி இருக்கிறது. ஹானர் செய்தித் தொடர்பாளர் Gadgets360 க்கு இதுகுறித்து பதிலளித்துள்ளார். அதன் விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

வெளிவேறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

வெளிவேறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

"ஹானர் இந்தியாவில் வணிகச் செயல்பாடுகளைப் பராமரித்து வருகிறது, அதன் வளர்ச்சி தொடரும், இந்திய சந்தையில் இருந்து ஹானர் வெளிவேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது என்ற செய்தி சரியானது அல்ல" என ஹானர் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சமீபத்தில் அறிமுகமான ஹானர் சாதனம்

சமீபத்தில் அறிமுகமான ஹானர் சாதனம்

இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதை மறுத்த ஹானர், இந்தியாவில் நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என்பதை உறுதிப்படுத்தினார். ஹானர் இந்தியாவில் சமீபத்தில் ஹானர் வாட்ச் ஜிஎஸ் 3-ஐ அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.12,990 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

ஹானர் வாட்ச் அறிமுகம்

ஹானர் வாட்ச் அறிமுகம்

ஹானர் வாட்ச் ஜிஎஸ் 3 ஆனது ஜூன் மாதம் இந்திய சந்தையில் ரூ.12,990 என அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் அமேசானில் ரூ.10,990 என மிட்நைட் பிளாக், ஓஷன் ப்ளூ மற்றும் கிளாசிக் கோல்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது 1.43 இன்ச் டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே உடன் 1000 நிட்ஸ் பிரகாச நிலையைக் கொண்டிருக்கிறது. இதன் பேட்டரி ஆயுள் 14 நாட்கள் ஆகும்.

ஹானர் எக்ஸ்8 5ஜி அறிமுகம்

ஹானர் எக்ஸ்8 5ஜி அறிமுகம்

அதேபோல் ஹானர் சமீபத்தில் உலகளவில் ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அது ஹானர் எக்ஸ்8 5ஜி ஆகும். ஹானர் நிறுவனம் ஹானர் எக்ஸ்8 5ஜி ஸ்மார்ட்போனை அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 480+ எஸ்ஓசி ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 48 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் 22.5 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

Honor X8 5G விலை விவரங்கள்

Honor X8 5G விலை விவரங்கள்

Honor X8 5G ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்து நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த ஸ்மார்ட்போனானது மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை வைத்து பார்க்கும் போது இது பட்ஜெட் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honor X8 5G சிறப்பம்சங்கள்

Honor X8 5G சிறப்பம்சங்கள்

Honor X8 5G சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது. பஞ்ச் ஹோல் வடிவமைப்புடன் 60Hz புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. அதேபோல் Honor X8 5G ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Honor X8 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

Honor X8 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

Honor X8 5G ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் இருக்கிறது. அதேபோல் செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி ஷூட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

ரேபிட் சார்ஜிங் ஆதரவு

ரேபிட் சார்ஜிங் ஆதரவு

இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான மேஜிக் யுஐ 402 மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் 22.5 வாட்ஸ் ரேபிட் சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆதரவு இருக்கிறது.

சர்வதேச அளவில் கிடைக்கும் தன்மை

சர்வதேச அளவில் கிடைக்கும் தன்மை

டூயல் சிம், 5G, 4G, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் வி5.2 ஆகிய இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி டைப்-சி போர்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. Honor X8 5G விலை விவரத்தை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகி இருக்கிறது. சர்வதேச அளவில் கிடைக்கும் தன்மை குறித்து நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

Best Mobiles in India

English summary
Honor Denies Exiting indian Market, maintaining business operation in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X