Home
News

200MP கேமரா.. டூயல் செல்பீ.. PWM டெக்னாலஜி.. அலறவிடும் HONOR 90 சீரிஸ்.. ஆனா விலை கம்மி!

இந்திய மார்க்கெட்டில் விட்ட இடத்தை பிடிக்க 200MP கேமரா, டூயல் செல்பீ, PWM டெக்னாலஜி என்று அட்டகாசமான அம்சங்களுடன் ஹானர் (HONOR) நிறுவனத்தின் ஹானர் 90 சீரிஸ் (HONOR 90 Series) போன்கள் வெளியாக இருக்கின்றன. இதன் முழு விவரம் இதோ.

இந்திய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் சக்கைப்போடு போட்ட வந்த ஹானர் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம், அடுத்தடுத்த வந்த போட்டி நிறுவனங்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதனால், அந்த நிறுவனம், இந்திய மார்க்கெட்டில் இருந்து வெளியேறப் போவதாகவே செய்திகள் வெளியாகி வந்தன.

200MP கேமரா.. டூயல் செல்பீ.. PWM டெக்னாலஜி.. அலறவிடும் HONOR சீரிஸ்!

ஆனால், ஹானர் நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து பிசினஸ் ஆபரேஷன் நடக்கும் என்று அறிவித்திருந்தது. இருப்பினும், புதிதாக எந்த போன் மாடல்களையும் வெளியிடவில்லை. இந்த சூழலில், பிரம்மாண்ட கேமரா, டிஸ்பிளே, சிப்செட் என்று அனைத்திலும் அசர வைக்கும்படி ஹானர் 90 சீரிஸ் மாடல்களான ஹானர் 90 (HONOR 90) மற்றும் ஹானர் 90 ப்ரே (HONOR 90 Pro) போன்களுடன் மீண்டும் களமிறங்க இருக்கிறது.

ஹானர் 90 அம்சங்கள் (HONOR 90 Specification): இந்த போன் 6.7 இன்ச் (2800 x 1224 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஹானர் 90 போன், 200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி டெப்த் லென்ஸ் என்று டிரிபிள் கேமரா செட்டப் கொண்டுள்ளது. செல்பீ கேமரா விவரம் வெளியாகவில்லை. இருப்பினும், 32 எம்பியாக இருக்க வாய்ப்புள்ளது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த போனின் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

ஹானர் 90 ப்ரோ அம்சங்கள் (HONOR 90 Pro Specification): இந்த ப்ரோ போன், 6.78 இன்ச் (2800 x 1224 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. ஸ்னாப்டிராகன் 9 பிளஸ் ஜென் 1 (Snapdragon 9+ Gen 1) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனின் கேமராவை பொறுத்தவரையில் 200 எம்பி மெயின் + 32 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்டுள்ளது. இந்த போனின் செல்பீ கேமரா தகவல்களும் வெளியாகவில்லை. ஆனால், 2 செல்பீ செல்பீ கேமராக்களை ஹானர் 90 ப்ரோ கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த போன் 100W ஃபாஸ்ட் சார்ஜிக் வசதி உடன் 5,000mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த போன்களும் ஆண்டிராய்டு 13 உடன் வருகிறது. இதில், ஹானர் 90 ப்ரோ போன் மட்டும் மேஜிக்ஓஎஸ் (MagicOS) உடன் சேர்ந்து வருகிறது. இவற்றில் PWM டிம்மிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த 90 சீரிஸ் போன்களும் ஜூலை 6ஆம் தேதி பாரிஸ் நகரில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அதன்பின், அடுத்தடுத்து விற்பனைக்கு வர இருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பின்பு, இந்தியாவில் வெளியாகும் ஹானர் ஸ்மார்ட்போன்களாக இந்த 90 சீரிஸ் போன்கள் இருக்கும். இந்த போன்களின் விலை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ஹானர் போன்களுக்கான ரசிகர் பட்டாளம் குறைவே, என்றாலும் இந்த ஹானர் 90 சீரிஸ் போன்களின் கேமரா அம்சங்கள் விற்பனையை தூக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
HONOR Confirmed Its HONOR 90 Series With HONOR 90 and HONOR 90 Pro To Launch On July 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X