தள்ளுபடி விலையில் விற்பனைக்குவரும் ஹானர் 9 லைட்.!

By Prakash
|

ஹூவாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் புதிய கிரே நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன்பின்பு இந்த புதிய கிரே நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனின் விற்பனை பிப்ரவரி 6-ம் தேதி தொடங்கியது. மேலும் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் வருகிற 13-ம் தேதி ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி விலையில் விற்பனைக்குவரும் ஹானர் 9 லைட்.!

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி முறையே ரூ.10,999 மற்றும் 14,999-என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மிட்நைட் பிளாக் மற்றும் சஃபையர் பிளாக் நிறங்களிலும் இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனை ஃபிளிப்கார்ட் தளத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு கொண்டு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 5சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் வோடபோன் சிறப்பு சலுகையாக 199-க்கு ரீசார்ஜ் செய்தால் ஆறு மாதத்திற்கு 295 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

தள்ளுபடி விலையில் விற்பனைக்குவரும் ஹானர் 9 லைட்.!

இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஹானர் 9 லைட் ஆனது, ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான எம்ஐயூஐ 8.0 கொண்டு இயங்குகிறது. இது ஒரு 5.65 அங்குல முழு எச்டி + (1080x2160 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது.

பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரிவின்கீழ் களமிறங்கியுள்ள இக்கருவி, பொக்கே விளைவுகளை ஏற்படுத்தும் திறன் கொண்ட நான்கு லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதை சந்தையில் வேறு எந்த சாதனமும் வழங்கவில்லை. முன்னர் குறிப்பிட்டபடி, ஹானர் 9 லைட் அதன் முன் மற்றும் பின்புறத்தில் 13எம்பி + 2எம்பி கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன் மற்றும் பின்புறம் உள்ள 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ் ஆனது நீங்கள் கைப்பற்றும் படங்களின் ஆழத்தினை உறுதி செய்யும்.

தள்ளுபடி விலையில் விற்பனைக்குவரும் ஹானர் 9 லைட்.!

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இந்த ​​ஸ்மார்ட்போன் ப்ளூடூத், வைஃபை, 4ஜி வோல்ட்ஜி, பிஎஸ்/ எ-ஜிபிஎஸ், ஓடிஜி ஆதரவுடனான மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. உடன் அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்நட்டோமீட்டர் (டிஜிட்டல் திசைகாட்டி) மற்றும் பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்டுள்ளது.

தள்ளுபடி விலையில் விற்பனைக்குவரும் ஹானர் 9 லைட்.!

ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் ஹானர் 9 லைட் ஆனது 3ஜி சேவையின் கீழ் 20 மணி நேரம் வரையிலான பேச்சு நேரம் மற்றும் 24 நாட்கள் வரையிலான காத்திருப்பு நேரத்தை வழங்குமென நிறுவனம் கூறுகிறது. உடன் இந்த ஹேண்ட்செட் கிட்டத்தட்ட 2 மணி நேரம் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகுமென்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பரிமாணங்களின் அடிப்படையில், ஹானர் 9 லைட் ஆனது 151x71.9x7.6 மிமீ மற்றும் 149 கிராம் எடையும் கொண்டுள்ளது

Most Read Articles
Best Mobiles in India

English summary
Honor announces attractive sale offers discounts on Honor 9 Lite on Feb 13; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X