Home
News

யாரு விடுவா? 200MP கேமரா.. 256GB மெமரி.. OLED டிஸ்பிளே.. ஆஃபரில் ஹானர் போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் தரமான ஹானர் 90 ஸ்மார்ட்போனுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஹானர் 90 மாடல் ஆனது சில மாதங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் கொண்ட ஹானர் 90 போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போனை ரூ.34,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.3000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

எனவே ரூ.31,999 இருந்தால் போதும் இப்போது ஹானர் 90 ஸ்மார்ட்போனை வாங்க முடியும். குறிப்பாக இந்த ஹானர் 90 தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

யாரு விடுவா?  256GB மெமரி.. OLED டிஸ்பிளே.. ஆஃபரில் ஹானர் போன்..

ஹானர் 90 அம்சங்கள்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 4என்எம் (2.5GHz Qualcomm Snapdragon 7 Gen 1 4nm) சிப்செட் வசதியுடன் இந்த ஹானர் 90 போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

200 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2 எம்பி (மேக்ரோ ஆப்சன்) டெப்த் லென்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். . மேலும் இதில் 50 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் 4K வீடியோ ரெக்கார்ட்டிங் சப்போர்ட் வருகிறது. எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.

8 ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன். மேலும் கேமிங் பிரியர்களுக்காக அட்டகாசமான ஸ்மார்ட்போனில் அட்ரினோ 644 ஜிபியு (Adreno 644 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹானர் நிறுவனம்.

அதேபோல் 6.7 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ஓஎல்இடி (OLED) குவாட் கர்வ்ட் (Quad Curved) டிஸ்பிளே வசதியுடன் ஹானர் 90 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3840Hz பிடபுள்யூஎம் டிம்மிங் ஃபிரிகொன்சி (PWM Dimming Frequency) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளேவில் டிசிஐ-பி3 (DCI-P3) கலர் காமட் மற்றும் 1600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மிட்நைட் பிளாக் (Midnight Black), டயமண்ட் சில்வர் (Diamond Silver) மற்றும் எம்ரால்டு கிரீன் (Emerald Green) ஆகிய 3 கலர்களில் இந்த போனை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹானர் 90 ஸ்மார்ட்போனில் 66W சூப்பர்சார்ஜ் (SuperCharge) கொண்ட 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதேபோல் இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.2, NFC, GPS மற்றும் USB Type-C உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 90 smartphone is available at 27 percent discount on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X