Home
News

200MP கேமரா.. ஃபிளொட்டிங் டிஸ்பிளே.. இந்தியாவில் வெளிவரும் புது மிரட்டல் போன்.. எந்த மாடல் தெரியுமா?

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு, ஹானர் (Honor) நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் ஒரு புதிய ஸ்மார்ட்போனுடன் ரீஎன்ட்ரி தருகிறது. ஹானர் நிறுவனம் இந்தியாவில் ஹானர் 90 (Honor 90) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.

சாம்சங், ஒன்பிளஸ், மோட்டோரோலா, ஒப்போ, விவோ, டெக்னோ, போன்ற முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன் சாதனங்களுடன் நேரடி போட்டியில் ஹானர் நிறுவனம் களமிறங்கவுள்ளது. ஹானர் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ள புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்ச தகவல்கள் இப்போது லீக் ஆகியுள்ளது.

200MP கேமரா.. ஃபிளொட்டிங் டிஸ்பிளே.. இந்தியாவில் வெளிவரும் புது போன்..

ஹானர் 90 (Honor 90) போனில் நாம் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விபரத்தை இப்போது பார்க்கலாம். ஐஏஎன்எஸ் (IANS) தகவலின் படி, ஹானர் 90 இந்தியாவில் சுமார் ரூ. 45,000 என்ற விலை புள்ளிக்குள் வெளியிடப்படும். தற்போதைய நிலவரப்படி, இது ஆரம்ப விலையாக இருக்குமா அல்லது ஒரு ஹை-எண்டு வேரியண்ட் விலையாக இருக்குமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், Honor 90 ஸ்மார்ட்போன் சீனாவில் மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட், 16 ஜிபி + 256 ஜிபி மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் என்று 3 வேரியண்ட் மாடல்களில் வருகிறது.

இதன் விலை முறையே மாடலுக்கு CNY 2,499 ஆக இருந்தது. இது இந்தியா மதிப்பில் தோராயமாக ரூ. 28,705 ஆகும். இதன் 16 ஜிபி + 256 ஜிபி மாடல் CNY 2,799 என்ற விலையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 32,1632 ஆகும். இறுதியாக இதன் 16 ஜிபி + 512 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ 34,447 ஆக இருக்கும்.

200MP கேமரா.. ஃபிளொட்டிங் டிஸ்பிளே.. இந்தியாவில் வெளிவரும் புது போன்..

இந்த ஸ்மார்ட்போனின் சரியான அறிமுக வெளியீட்டு தேதியை ஹானர் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும்,புதிய ஹானர் 90 சாதனம் செப்டம்பர் நடுப்பகுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹானர் நிறுவனம் இதன் அதிகாரப்பூர்வ விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Honor 90 ஆனது ஏற்கனவே உலகளவில் பீகாக் ப்ளூ (Peacock blue), டயமண்ட் சில்வர் (Diamond silver), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் எமரால்டு கிரீன் (Emerland Green) ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சரி, இப்போது இந்த வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் விபரங்களை பற்றி பார்க்கலாம்.

புதிய ஹானர் 90 ஸ்மார்ட்போன் சாதனம் 6.7' இன்ச் கொண்ட AMOLED குவாட் கர்வுடு ஃபிளொட்டிங் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் ஸ்னாப் டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) சிப்செட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

200MP கேமரா.. ஃபிளொட்டிங் டிஸ்பிளே.. இந்தியாவில் வெளிவரும் புது போன்..

இது 200MP + 12MP + 2MP கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அம்சத்துடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. முன்பக்கத்தில், இந்த ஹானர் 90 ஸ்மார்ட்போன் 50MP செல்பி கேமராவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஸ்டோரேஜ் பற்றி பேசுகையில், இது 8ஜிபி + 256 ஜிபி, 12 ஜிபி + 256ஜிபி மற்றும் 12 ஜிபி + 512 ஜிபி மாடலை கொண்டுள்ளது.

இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான MagicOS 7.1 உடன் வருகிறது. இது 66W சூப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இதில் புளூடூத் 5.2, பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், NFC, யுஎஸ்பி டைப்-C மற்றும் பல அம்சங்கள் இதில் உள்ளது. இந்த ஹானர் 90 சிறப்பம்ச விவரக்குறிப்புகள் உலகளாவிய மாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்திய வேரியண்ட் வேறுபடுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 90 price in India ahead of official launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X