டிச 21: கம்ப்யூட்டரை மிஞ்சும் Honor 90 GT அம்சம்.. அப்படியென்ன இதில் புதுசா இருக்கிறது? என்ன விலை?
ஹானர் (Honor) நிறுவனம், வரும் டிசம்பர் 21ம் தேதி அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஹானர் 90 ஜிடி (Honor 90 GT) மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இது கம்ப்யூட்டரை (Computer) மிஞ்சும் இமேஜ் அனுபவத்தை வழங்குமென்று நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை ஹானர் (Honor) நிறுவனம் வரும் டிசம்பர் 21ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. அறிமுகத்திற்கு முன்பாக இந்த போனின் ப்ரீ-புக்கிங் இப்போதில் இருந்தே துவங்கிவிட்டது. இந்த புதிய ஹானர் 90 GT ஸ்மார்ட்போன் சாதனம் 4 வேரியண்ட் (4 variant) மாடலுடன், 3 கலர் (3 colour option) விருப்பங்களை கொண்டுள்ளது. இது தரமான ஹார்டுவேர் (Hardware) அம்சங்களை பேக் செய்து மக்களை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, இந்த ஸ்மார்ட்போன் கம்ப்யூட்டர் லெவல் இமேஜ் அனுபவத்தை (PC-level viewing experience) வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த அம்சத்தை பெறுவதற்காக நிறுவனம் அதன் சிப்செட் (Chipest) மற்றும் டிஸ்பிளே (Display) மற்றும் சில அம்சங்களை மேம்படுத்தியுள்ளது. டிஸ்பிளே தரத்தின் குவாலிட்டியை (Display quality) பல மடங்கு அதிகரித்து டியூன் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் கேமிங் (Gaming) துறைக்கு ஏற்ற ஹை-டிஸ்பிளே டிஸ்பிளே மற்றும் பிரத்தியேகமான டிஸ்பிளே டியூனிங் (Display tuning) மூலம் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே தரம் பெர்சனல் கம்பியூட்டருக்கு (Personal computer) நிகரான காட்சி அனுபவத்தை (Visual experience) வழங்கும் என்று ஹானர் நிறுவனம் கூறியுள்ளது. Honor 90 GT போன் சிறப்பான பெர்பார்மென்ஸ் மற்றும் ஜிபியு (GPU) மேம்படுத்தல்களை பெறுகிறது.

இந்த புதிய ஹானர் 90 GT ஸ்மார்ட்போன் மெல்லிய பேசல் (slim and narrow bezels) கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) மாடலில் உள்ளது போன்ற பேசல்களை இந்த மொபைல் (Mobile) கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த Honor 90 GT சாதனம் இடைவெளி இல்லாத மற்றும் தடையில்லாத 5 மணி நேர முழு கேமிங் பிளே நேரத்தை வழங்குகிறது.
குறிப்பாக, இது தொடர்ச்சியான பிளே நேரத்தின் போதும் கூட எந்தவித லேக் (lag) மற்றும் ஹேக்கிங் (hanging) போன்ற சிக்கல்களை சந்திக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம், இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 2 SoC) வழங்கப்பட்டுள்ளது. இது தான் இந்த ஆண்டின் அதிபயங்கரமான சக்தி வாய்ந்த சிப்செட் மாடலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹானர் 90 GT ஸ்மார்ட்போன் சாதனம் 12GB + 256GB, 16GB + 256GB, 16GB + 512GB, மற்றும் 24GB + 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களாக வருகிறது. இது OIS ஆதரவுடன் 50MP மெயின் கேமராவுடன் + 8 MP + 5 MP ட்ரிபிள் ரியர் கேமராவை வழங்குகிறது. இது 6.69" இன்ச் அளவு 1080 x 2400 பிக்சல் கொண்ட AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் விலை ரூ.40,000 முதல் துவங்குகிறது.


Click it and Unblock the Notifications








