Honor 90 5G: 200MP கேமரா மீது அதிரடி தள்ளுபடி.. இப்படி ஒரு விலையில் புது போன் வாங்கவே முடியாது..
Honor 90 5G செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட்டுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது அதிரடி தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கவுள்ளது.
கடினமான 3 வருட இடைவெளிக்கு பிறகு ஹானர் நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ஹானர் 90 5ஜி (Honor 90 5G) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் நாளை விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. நாளை துவங்கவிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் (Amazon Great Indian Festival) விற்பனையில் இது நம்ப முடியாத தள்ளுபடியை பெறுகிறது.

இந்த சிறப்பு விற்பனையா பிளிப்கார்ட் Flipkart இன் Big Billion Days விற்பனையுடன் ஒத்துப்போகிறது. ஸ்மார்ட்போன்களைத் தவிர, இந்த இரண்டு இ-காமர்ஸ் விற்பனைகளும் பரந்த அளவிலான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அல்லாத பொருட்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது. சரி, இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போனின் மீது கிடைக்கும் அபார தள்ளுபடி பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
ஹானர் 90 5ஜி விற்பனை மற்றும் விலை (Honor 90 5G sale & price):
Honor 90 5G இன் 8GB + 256GB வேரியண்ட் மாடலின் விலை அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் போது ரூ. 26,999 விலையில் வாங்க கிடைக்கும். அதேபோல் இதன் 12GB + 512GB வேரியண்ட் மாடலை வெறும் ரூ. 29,999 விலையில் வாங்க முடியும். இந்த விலைகளில் விற்பனை தள்ளுபடி மற்றும் வங்கி தள்ளுபடிகள் இரண்டும் அடங்கும்.
ஹானர் 90 5ஜி (Honor 90 5G) சிறப்பம்சங்கள்:
Honor 90 5G ஆனது 1.5K கொண்ட 2664 x 1200 பிக்சல்கள் தீர்மானம் உடைய 6.7' இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 120Hz வரையிலான ரெஃப்ரஷ் ரேட் வீதம் மற்றும் 1,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Magic OS 7.1 உடன் அனுப்பப்படுகிறது.

கேமரா பிரிவில், ஹானர் 90 5G ஆனது ஹானர் இமேஜ் என்ஜின் ஆதரவுடன் 200 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. இந்த விலையில் 200 மெகாபிக்ஸல் கேமராவை பெறுவது ஒரு சிறப்பான விஷயம் தான்.
இந்த புதிய ஹானர் 90 5ஜி ஸ்மார்ட்போன் 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, ப்ளூடூத் 5.2, NFC, GPS மற்றும் USB Type-C ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இது கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் டயமண்ட் சில்வர் (diamond silver), எமரால்டு கிரீன் (Emerald Green) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight black) வண்ணங்களில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








