பட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் அசத்தும் ஹானர் 9 லைட்.!

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானர் சமீபத்தில் இந்திய சந்தையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஹானர் 9 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது.

By Prakash
|

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ஹானர் சமீபத்தில் இந்திய சந்தையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஹானர் 9 லைட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. 3ஜிபி ரேம் மாறுபாடு கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.10,999-ஆக உள்ளது, அதன்பின்பு இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துள்ளியமான வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் அசத்தலான இரட்டை லென்ஸ் கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

பட்ஜெட் விலையில் டூயல் கேமராவுடன் அசத்தும் ஹானர் 9 லைட்.!

சிறந்த ஆப் பயன்பாடுகள் மற்றும் கேமரா வசதி, இணையம் போன்ற பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகவரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பிரீமியம் கிளாஷ் யுனிபாடி வடிவமைப்பு:

பிரீமியம் கிளாஷ் யுனிபாடி வடிவமைப்பு:

ஹானர் 9 லைட் வடிமைப்பு பற்றி பேசுகையில் பளபளப்பான பிரீமியம் கிளாஷ் யுனிபாடி வடிவமைப்பு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளதால் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் சபீரியன் ப்ளூ, மிட்நைட் பிளாக் மற்றும் சாம்பல் நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும்.

லேசான மற்றும் மிகவும் சிறிய அமைப்பில் வெளிவந்துள்ள ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் 18:9 என்ற திரைவிகிதத்தைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 16:9 விகிதம் திரை சாதனங்களுடன் ஒப்பிடுகையில் மெல்லிய பெசல்களைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடல். ஐபோன் விட அதிக சிறப்பம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

1080 பிக்சல் தீர்மானம் கொண்ட உயர் 18:9 திரை விகிதம் :

1080 பிக்சல் தீர்மானம் கொண்ட உயர் 18:9 திரை விகிதம் :

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2,160x1,080 பிக்சல் தீர்மானம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்பில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விளையாட்டுகள், வீடியோக்கள் மற்றும் வலைப்பக்கங்கள் போன்றவற்றில் மற்ற ஸ்மார்ட்போன்கள் ஒப்பிடும்போது மென்மையான ஹானர் 9 லைட் அழகாக மற்றும் கவர்ச்சியாக இருக்கும்.

நான்கு லென்ஸ் கேமரா அமைப்பு:

நான்கு லென்ஸ் கேமரா அமைப்பு:

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனில் முன்புறம் மற்றும் பின்புறம் சேர்த்து நான்கு லென்ஸ் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு குறைவான வெளிச்சம்கொண்ட கொண்ட இடத்தில் கூட துள்ளியமான வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் திறமைக் கொண்டுள்ளது இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி+ 2எம்பி ரியர் மற்றும் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன் மற்றும் பின்புறம் உள்ள 2எம்பி இரண்டாம் நிலை லென்ஸ் நீங்கள் கைப்பற்றும் படங்களில் ஆழமான தகவலைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பின்புற கேமரா 'பேஸ் டிடக்சன் ஆட்டோஃபோகஸ்' மற்றும் 'பொக்கே அம்சங்களை கொண்டுள்ளது.

முன் மற்றும் பின்புறத்தில் 2எம்பி இரண்டாம் சென்சார் பொறுத்தவரை முகங்கள், மாறுபட்ட அம்சங்களை அடையாளம் காணக்கூடியது மற்றும் பொருள் சார்ந்த அடிப்படையில் அழகு விளைவுகள் தனிப்பயனாக்கலாம். மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனில் இதே சிறப்பம்சம் இடம்பெற்றுள்ளது. செல்பீ புகைப்படங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

13எம்பி முதன்மை சென்சார் மற்றும் 2எம்பி இரண்டாம் சென்சார் கலவையை பட்ஜெட் விலை புள்ளியில் ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனை கொண்டுவந்துள்ளது ஹூவாய் நிறுவனம். மேலும் இயற்கை காட்சிகள், மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தகுந்தபடி இந்த ஹானர் 9 லைட்
ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

வன்பொருள் மற்றும் மென்பொருள் செயல்திறன்:

வன்பொருள் மற்றும் மென்பொருள் செயல்திறன்:

ஹானர் 9 லைட் ஆனது ஆக்டோ-கோர் கிரின் 659 செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரி அல்லது
4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி மாறுபாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும். இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில், 4ஜி -எல்டிஇ, வோல்ட்இ ப்ளூடூத் 4.2, வைஃபை, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது.

ஹூவாய் நிறுவனம் குறுகிய காலத்தில் பல இரட்டை லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் ஒரு நிறுவனமாகும். இதிலிருந்து ஹூவாய் நிறுவனத்தின் கேமராத்துறை சார்ந்த அதீத கற்றல் வெளிப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஹூவாய் நிறுவனம் அதன் தலைசிறந்த ஹானர் மற்றும் பி தொடர் சாதனங்களில் டூயல் கேமரா அமைப்பை வெற்றிகரமாக வழங்கி வருகிறது. மேலும் அந்த வரிசையில் சிறந்த அம்சங்களை கொண்டு இந்த
ஹானர் 9 லைட் ஆனது வெளிவந்துள்ளது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
 விலை மதிப்பில் ஒரு தெளிவான எடுத்துக்காட்டு:

விலை மதிப்பில் ஒரு தெளிவான எடுத்துக்காட்டு:

ஹானர் 9 லைட் ஆனது உயர்தர தொழில்நுட்பத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு 18:9 என்ற திரைவிகிதம் குவாட்-லென்ஸ் கேமரா மற்றும் பளபளப்பான பிரீமியம் கிளாஷ் யுனிபாடி வடிவமைப்பு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் எஸ்.பி.ஐ. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பிளாட் 5 சதவிகிதம் விலைகுறைப்பை பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வோடபோன் பயனர்கள் இலவச மொபைல் தரவைப் பெற தகுதியுடையவர்கள். மேலும் 295ஜிபி வீதம் பெற 6மாதங்களில் INR 199 இன் எளிய ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Honor 9 Lite is the all rounder of budget Android smartphones; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X