Home
News

விலைகுறைப்புடன் வெளிவரும் அசத்தலான ஹானர் 9 லைட் .!

அம்சங்களை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் ஒரு இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும்.

By Prakash S

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி ஃபிளாஷ் சேல் இன்று மதியம் 12 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் ஃபிளாஷ் சேல் முன்னிட்டு 4ஜிபி ரேம் கொண்ட இந்த சாதனத்திற்கு ரூ.2000-வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆஃபரை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜியோ நிறுவனம் இந்த ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போனுக்கு கேஷ்பேக் மற்றும் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலைகுறைப்புடன் வெளிவரும் அசத்தலான ஹானர் 9 லைட் .!

ஹானர் 9 லைட் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதன்பின்பு இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் முறையே ரூ.10,999 மற்றும் ரூ.14,999-ஆக உள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஃபிளாஷ் சேல் முன்னிட்டு 4ஜிபி ரேம் கொண்ட சாதனத்தை ரூ.12,999-க்கு வாங்க முடியும்.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

அம்சங்களை பொறுத்தமட்டில், ஹானர் 9 லைட் ஒரு இரட்டை சிம் (நானோ) ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். இது நிறுவனத்தின் சமீபத்திய இஎம்யூஐ 8.0 கொண்டு (ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான) இயங்குகிறது. ஒரு 5.65 அங்குல முழு எச்டி + (1080x2160 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1(8: 9 விகிதம் மற்றும் 428பிபிஐ பிக்சல் அடர்த்தி) கொண்டுள்ளது.

 கேமரா

கேமரா

அக்வா-கோர் ஹூவாய் ஹைசிலிகான் கிரின் 659 எஸ்ஓசி உடனான 3ஜிபி அல்லது 4ஜிபி ரேம் கொண்டு இயங்கும் ஹானர் 9 லைட் ஆனது நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. இரண்டு இரட்டை கேமரா அமைப்புகளும் ஒரு 2 மெகாபிக்சல் இரண்டாம் கேமரா கொண்ட 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது. ரியர் கேமரா மட்டும் பிடிஏஎப் ஆட்டோபோகஸ் மற்றும் எல்இடி பிளாஷ் கொண்டுள்ளது.

கலப்பின இரட்டை சிம்

கலப்பின இரட்டை சிம்

உள்ளடக்க சேமிப்பை பொருத்தமட்டில் ஹானர் 9 லைட் ஆனது இரண்டு சேமிப்பு விருப்பங்களின் கீழ் வருகிறது - 32 ஜிபி மற்றும் 64 ஜிபி. இவை இரண்டுமே கலப்பின இரட்டை சிம் உள்ளமைவில் மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவை வழங்குகின்றன.

 4ஜி வோல்ட்

4ஜி வோல்ட்

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில் இந்த ​​ஸ்மார்ட்போன் ப்ளூடூத், வைஃபை, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், ஓடிஜி ஆதரவுடனான மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. உடன் அக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்நட்டோமீட்டர் (டிஜிட்டல் திசைகாட்டி) மற்றும் பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்டுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)
பேட்டரி

பேட்டரி

ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் ஹானர் 9 லைட் ஆனது 3ஜி சேவையின் கீழ் 20 மணி நேரம் வரையிலான பேச்சு நேரம் மற்றும் 24 நாட்கள் வரையிலான காத்திருப்பு நேரத்தை வழங்குமென நிறுவனம் கூறுகிறது. உடன் இந்த ஹேண்ட்செட் கிட்டத்தட்ட 2 மணி நேரம் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகுமென்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பரிமாணங்களின் அடிப்படையில், ஹானர் 9 லைட் ஆனது 151x71.9x7.6 மிமீ மற்றும் 149 கிராம் எடையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Honor 9 Lite flash sale today 4GB model to cost Rs 2000 less ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X