பக்கா பட்ஜெட் விலையில் Honor 8A 2020: அட்டகாச அம்சங்கள்!

|

ஹானர் 8ஏ 2020 ஸ்மார்ட் போன் பக்கா பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அதன் விலை மற்றும் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஹானர் ப்ளே 8ஏ சீனாவில் அறிமுகம்

ஹானர் ப்ளே 8ஏ சீனாவில் அறிமுகம்

கடந்தாண்டு ஹானர் ப்ளே 8ஏ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மேம்படுத்தப்பட்ட எடிஷன் போனானது ஹானர் 8 ஏ என்று அழைக்கப்படுகிறது. அதேபோல் இங்கிலாந்து வலைதளமான க்ளோவில் பட்டியிலடப்பட்டதை காண முடிந்தது.

ஹானர் 8 ஏ 2020 விலை விவரங்கள்

ஹானர் 8 ஏ 2020 விலை விவரங்கள்

ஹானர் 8 ஏ 2020-ஸ்மார்ட் போனின் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை ரூ.10,800-க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ப்ளூ மற்றும் பிளாக் வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் ஹானர் ஏ ஸ்மார்ட் போனில் 32 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.8000-க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் தற்போதுவரை இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வில்லை.

மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!மனிதர்களின் நடமாட்டம் குறைந்ததால் பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்!

 ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன்

ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன்

ஹானர் நிறுவனம் தனது ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடலை ரஷ்யாவில் அறிமுகம் செய்தது, குறிப்பாக இந்த சாதனம் சிங்கிள் ரியர் கேமரா,அருமையான சிப்செட் வசதி, சிறந்த வடிவமைப்பு என பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.09-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 × 1560 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி

அருமையான சிப்செட் வசதி

இந்த ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன் மாடலில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியே பி35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்

3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக கருப்பு, நீலம், பசுமை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

13எம்பி கேமரா ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன்

13எம்பி கேமரா ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போன்

13எம்பி கேமரா ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

பாஸ்ட் சார்ஜிங் வசிதி

பாஸ்ட் சார்ஜிங் வசிதி

ஹானர் 8ஏ பிரைம் ஸ்மார்ட்போனில் 3020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசிதி உள்ளது, எனவே சார்ஜ் பற்றி கவலை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

வேற லெவல்: தினசரி 2 ஜிபி டேட்டா- ரூ.179, ரூ.279, ரூ.349 Airtel அறிமுகப்படுத்திய அட்டகாச திட்டம்!வேற லெவல்: தினசரி 2 ஜிபி டேட்டா- ரூ.179, ரூ.279, ரூ.349 Airtel அறிமுகப்படுத்திய அட்டகாச திட்டம்!

வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட்

வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட்

ஹானர் 8ஏ பிரைம்; சாதனத்தில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்க வசதிகளுடன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Honor 8A smartphone introduce in budget price: here the specification and price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X