Home
News

ஹானர் 7 : அதிக அம்சங்கள், குறைந்த விலை..!!

By Meganathan

ஹானர் பிரான்டிங் கொண்ட புதிய ஹானர் 7 ஸ்மார்ட்போனினை ஹூவாய் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக சீனா மற்றும் ஐரோப்பாவில் இந்த கருவி அறிமுகம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இன்றைய இண்டர்நெட் சமூகத்தினருக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஹானர் 7 மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் கருவியின் அழகு அனைவரையும் கவரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது.

பார்க்க அழகாக இருப்பதோடு பயன்படுத்தவும் சிறப்பான அனுபவத்தை வழங்கும் ஹானர் 7 கருவியின் டாப் 10 சிறப்பம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

வடிவமைப்பு

வடிவமைப்பு

யுனிபாடி டிசைன் மற்றும் அலுமினியம் மெட்டல் கொண்டு ஹானர் 7 வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்டல் பினிஷ் செய்யப்பட்டுள்ளதால் கையில் பயன்படுத்தும் போது அருமையான அனுபவத்தை வழங்குகின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஹானர் 7 கருவியில் 5.2 இன்ச் ஐபிஎஸ்-நியோ எல்சிடி டிஸ்ப்ளே 1920*1080 ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளதோடு சூரிய வெளிச்சத்திலும் சிரமம் இன்றி திரையை பார்க்க முடியும்.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

இந்த ஸ்மார்ட்போனின் மிக முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுவது கைரேகை ஸ்கேனர் தான். கருவியின் பின்புறம் பொருத்தப்பட்டிருக்கும் கைரேகை ஸ்கேனர் வேகமாகவே செயல்படுகின்றது.

பிராசஸர்

பிராசஸர்

ஹானர் 7 ஆக்டா கோர் ஹூவாய் கிரின் 935 பிராசஸர் மற்றும் Mali-T628 எம்பி4 ஜிபியு கொண்டிருக்கின்றது.

ரேம்

ரேம்

சக்தி வாய்ந்த ஆக்டா கோர் பிராசஸர் 3 ஜிபி ரேமுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இயங்குதளம்

இயங்குதளம்

ஹானர் 7 கருவி ஈஎம்யுஐ 3.1 மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது.

கேமரா

கேமரா

20 எம்பி ப்ரைமரி கேமரா, ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோபோகஸ், ஐஎம்எக்ஸ் 230 சென்சார், 6-லென்ஸ் மாட்யூல் மற்றும் சப்ஃபையர் கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது.

செல்பீ

செல்பீ

8 எம்பி செல்பீ கேமரா கொண்டிருக்கும் ஹானர் 7 கருவியில் செல்பீ மற்றும் வீடியோ காலிங் போன்றவைகளை மேற்கொள்ள முடியும்.

பேட்டரி

பேட்டரி

3100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த கருவி 3ஜி சேவையில் 8 மணி நேர டாக்டைம் வழங்கும் என்பதோடு வேகமாக சார்ஜ் செய்யும் அம்சமும் இருக்கின்றது.

விலை

விலை

இத்தனை சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் ஹானர் 7 இந்திய சந்தையில் ரூ.22,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Honor 7 Top 10 Stunning Features Of The Smartphone. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X