அக்டோபரில் அசத்த வரும் ஹானர் 7..!!

Written By:

நெக்சஸ் 6பி கருவியை தயாரித்து தினசரி செய்திகளில் கட்டாயம் இடம் பிடித்து வருகின்றது சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய். ஹானர் சீரிஸ் கருவிகளின் மூலம் உலக சந்தையை கவர்ந்து வரும் ஹூவாய் நிறுவனம் ஹானர் கருவிகளை கடந்த ஆண்டு அறிமுகம் செய்ததோடு விற்பனையிலும் அசத்தியது.

அக்டோபரில் அசத்த வரும் ஹானர் 7..!!

தற்சமயம் ஹூவாய் நிறுவனம் புத்தம் புதிய ஹானர் கருவியோடு இந்திய சந்தையில் மீண்டும் நுழைய இருக்கின்றது. ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹானர் 7 கருவியானது அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியாகலாம் என கூறப்படுகின்றது. ஹானர் 7 கருவியானது முழுவதுமாக மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு புதிய சிறப்பம்சங்கள், செய்கைகளை சப்போர்ட் செய்யும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இண்டர்நெட் உலகிற்கு ஏற்றார் போல் ஹானர் 7 கருவியானது இண்டர்நெட் சார்ந்த பயன்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மெட்டல் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது கருவியை அதிக அழகாக காண்பிப்பதோடு கையாளவும் சிறப்பான அனுபவத்தையும் வழங்குகின்றது.

சிறப்பம்சங்களை பொருத்த வரை ஹானர் 7 கருவியில் 5.2 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே 1080*1920 பிக்சல் ரெசல்யூஷன், 64-பிட் ஆக்டாகோர் கிரின் 935 பிராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் கொண்டிருப்பதோடு ஈஎம்யுஐ 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் இயங்குகின்றது.

அக்டோபரில் அசத்த வரும் ஹானர் 7..!!

இதோடு 20 எம்பி ப்ரைமரி கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்230 சென்சார் மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை மேலும் அழகூட்ட பல விசேஷ ஃபில்டர்களும் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. கைரேகை ஸ்கேனர் ப்ரைமரி கேமராவிற்கு கீழ் பொருத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் கருவியை அன்லாக் செய்ய முடியும்.

இத்தனை அம்சங்கள் கொண்ட ஹானர் கருவியானது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் ஏதும் இருக்க முடியாது. இன்றைய இளைய சமுதாயத்தினர் விரும்பும் அனைத்து அம்சங்களும் கொண்ட இந்த கருவியின் விற்பனையை காத்திருந்தே பார்க்க வேண்டும்.

Read more about:
English summary
Honor 7 To Launch In India In The Second Week Of October!. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot