ஹானர் 5எக்ஸ் : குறைந்த விலைக்கு தலைசிறந்த அம்சங்கள்.!!

By Meganathan
|

ஹூவாய் நிறுவனத்தின் ஆன்லைன் பிரான்டான ஹானர் இந்தியாவில் ஒரே ஆண்டில் அதிக பிரபலம் அடைந்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும். அதிக சிறப்பம்சங்களை வழங்க சிறிதளவும் தயக்கம் காட்டாமல் சந்தையிலேயே மிக குறைந்த விலையில் கருவிகளை வழங்குவதில் இந்நிறுவனம் பெயர் பெற்றிருக்கின்றது.

அந்த வகையில் ஹானர் நிறுவனம் இந்திய சந்தையை ஆச்சர்யத்தில் ஆழ்த்த புதிய கருவியை வெளியிட தயார் நிலையில் உள்ளது. ஹானர் 5எக்ஸ் என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்த கருவி ஜனவரி 28 ஆம் தேதி இந்தியா வருகின்றது.

புதிய மாடல்

புதிய மாடல்

கடந்த ஆண்டு வெளியான ஹானர் 4எக்ஸ் கருவியின் அடுத்த மாடல் தான் இந்த ஹானர் 5எக்ஸ். புதிய மாடல் என்பதால் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு புதிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

அந்த வகையில் ஹானர் 5எக்ஸ் கருவியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக இருப்பது அதன் கைரேகை ஸ்கேனர் தான். பாதுகாப்பு அம்சங்களை தொடர்ந்து கேமரா உள்ளிட்ட சில செயலிகளை இயக்கவும் இந்த ஸ்கேனரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகம்

வேகம்

ஹானர் 5எக்ஸ் கருவியில் இரண்டாம் தலைமுறை கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளதால் அதிகபட்சம் 0.5 நொடிகளில் போனினை அன்-லாக் செய்யும். இந்த கருவியில் அதிகபட்சம் 6 கைரேகைகளை பதிவு செய்து கொள்ள முடியும். 360 கோணத்தில் பதிவு செய்யும் அம்சம் வழங்கப்பட்டுள்ளதால் விரல் ஈரமாக இருந்தாலும் கைரேகை ஸ்கேனர் வேலை செய்யும்.

ஹார்டுவேர்

ஹார்டுவேர்

பல்வேறு உயர் ரக சிறப்பம்சங்கள், மற்றும் சக்தி வாய்ந்த ஹார்டுவேர் வழங்கப்பட்டிருந்தாலும் விலை அனைத்து பட்ஜெட் வாடிக்கையாளர்களும் வாங்கும் படி நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் சிப்செட் மற்றும் 13 எம்பி ப்ரைமரி கேமரா கொண்டிருப்பதோடு ப்ரீமியம் டைமண்டு-பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் அல்லாய் கேஸ் வழங்கப்பட்டுள்ளது.

போட்டி

போட்டி

மெட்டல் பாடி வடிவமைப்பு, கைரேகை ஸ்கேனர், உயர் ரக சிறப்பம்சங்கள் மற்றும் குறைந்த விலை போன்ற அம்சங்கள் இந்த கருவியை மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் 5 சில்வர் கருவிக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்றே தெரிகின்றது.

விலை

விலை

ஹானர் 5எக்ஸ் விலை மற்றும் விற்பனை சார்ந்த தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ள ஜனவரி 28 ஆம் தேதி வரை காத்திருப்பதை தவிற வேறு வழி இல்லை.

Best Mobiles in India

English summary
Honor 5X incoming: A mid range smartphone with metal chassis and a sensible fingerprint scanner. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X