ஹானர் 4சி சந்தையில் கிடைக்கும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்

By Meganathan
|

ஹூவாய் 4எக்ஸ் வெற்றையை தொடர்ந்து சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் சந்தையில் கிடைக்கும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்களுக்கு கடும் போட்டியாக இருக்கின்றது. இந்த போட்டியை மேலும் கடுமையாக்கும் விதமாக அந்நிறுவனம் பட்ஜெட் சந்தையில் புதிய ஹானர் 4சி ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது.

ஹானர் 4சி உயர் ரக ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும் இதன் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பு தரமாகவே இருக்கின்றது எனலாம். ஹானர் 4சி ஸ்மார்ட்போனினை ஏன் வாங்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா, கீழ் வரும் ஸ்லைடர்களில் அதன் சிறப்பம்சங்களை பார்த்தவுடன் போனினை உடனே வாங்க வேண்டும் என நினைப்பீர்கள்..

அழகிய வடிவமைப்பு

அழகிய வடிவமைப்பு

முற்றிலும் ப்ளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் பார்க்க அழகாகவே காட்சியளிக்கின்றது.

ஹெச்டி டிஸ்ப்ளே

ஹெச்டி டிஸ்ப்ளே

ஹானர் 4சி 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே 1280*720 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டிருப்பதால் திரைப்படம் மற்றும் புகைப்படங்களை பார்க்க சிறந்ததாக இருக்கும்.

பிராசஸர்

பிராசஸர்

1.2 ஜிகாஹெர்ட்ஸ் கிரின் 620 ஆக்டா-கோர் 64-பிட் பிராசஸர் கொண்டிருப்பதால் ஹானர் 4சி செயல்திறன் அபாரமாக இருக்கின்றது.

ரேம்

ரேம்

ஹானர் 4சி 2ஜிபி ரேம் மற்றும் சக்தி வாய்ந்த பிராசஸர் பல செயலிகளை இயக்கும் வசதியை அளிக்கின்றது.

இன்டர்ஃபேஸ்

இன்டர்ஃபேஸ்

எமோஷன் 3.0 யுஸர் இன்டர்ஃபேஸ் ஹானர் 4சி கருவியை பயன்படுத்த சிறந்த அனுபவத்தை வழங்குகின்றது. மேலும் ஒன்-ஹேன்டு யுஐ மற்றும் சஸ்பென்டு பட்டன் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை வழங்குகின்றது.

ப்ரைமரி கேமரா

ப்ரைமரி கேமரா

ஹானர் 4சி ப்ரைமரி கேமராவானது 13 எம்பி வழங்கப்பட்டிருப்பதால் துள்ளியமான புகைப்படங்களை வழங்கும் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் கூடுதல் செட்டிங்ஸ் புகைப்படங்களை மேலும் அழகானதாக மாற்றுகின்றது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

இந்த ஸ்மார்ட்போன் வைடு ஆங்கிள் 5 எம்பி முன்பக்க கேமரா அழகான செல்பீகளை எடுக்க வழிவகுக்கின்றது. தற்சமயம் கிடைக்கும் ஆண்ட்ராய்டு கருவிகளை விட இதன் செல்பீ கேமரா சிறப்பாகவே இருக்கின்றது.

ஸ்பீக்கர்

ஸ்பீக்கர்

இந்த கருவியின் ஸ்பீக்கர்கள் உண்மையிலேயே சிறப்பாக இருக்கின்றது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட இதன் சத்தம் துள்ளியமாக இருக்கின்றது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

கூடுதல் மெமரி ஹானர் 4சியின் மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த போன் 8 ஜிபி ரோம், மற்றும் 32 ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி கொண்டிருக்கின்றது.

பேட்டரி

பேட்டரி

அதிக திறன் கொண்ட 2550 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்பட்டிருக்கும் ஹானர் 4சி 15 மணி நேரம் வரை பேக்கப் வழங்குகின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Here are the reasons for Honor 4C to be a super budget smartphone on the market.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X