Home
News

ஹானர் 4சி - ஹானர் பீ எதை வாங்கலாம், நீங்களே முடிவு செய்யுங்கள்..

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் சமீபத்தில் இரு புதிய கருவிகளை இந்திய சந்தையில் வெளியிட்டது. ஹானர் 4சி மற்றும் ஹானர் பீ, இவை இரண்டும் பட்ஜெட் ரக வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வெளியிடப்பட்டிருந்தது.

உங்களை கிரங்கடிக்கும் தொழில்நுட்ப தகவல்கள்

ஹானர் 4சி கருவியின் ஹார்டுவேர் மற்றும் சிறப்பம்சங்கள் கச்சிதமாக வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் ஹானர் பீ ஸ்மார்ட்போனி்லும் சிறப்பம்சங்களுக்கு ஏற்ற விலை வழங்கப்பட்டுள்ளது. இங்கு இரு கருவிகளின் சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது..

தல-தளபதி வெறியர்கள், டன்டனக்கா டனுக்குனக்கா..!

வடிவமைப்பு

வடிவமைப்பு

தரமான கருவியின் வடிவமைப்பு சிறப்பாக இருக்க வேண்டும், அந்த விஷயத்தில் ஹானர் 4சி ப்ளாஸ்டிக் மூலம் சிற்பபாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹானர் பீ அழகான வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பான வடிவமைப்பு கையில் கச்சிதமாக பொருந்துகின்றது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

இரு கருவிகளின் டிஸ்ப்ளேவும் பயனாளிகளை கவரும் விதமாகவே வழங்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்ப்ளே மற்றும் அதிக ரெசல்யூஷன் ஹானர் 4சியை திரைப்படங்களை பார்க்க வழிவகுக்கின்றது. ஹானர் 4சி 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் 1280*720 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. ஹானர் பீ கருவியில் 4.5 இன்ச் ஸ்கிரீன் 480*854 ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

ஹூட்

ஹூட்

பட்ஜெட் விலையில் கிடைத்தாலும் இரு கருவிகளும் சிறப்பம்சங்களில் எந்த குறையும் வைக்கவில்லை என்றே கூற வேண்டும். ஹானர் 4சி 64-பிட் கிரின் 620 ஆக்டா கோர் எஸ்ஓசி 1.2 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 2 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஹானர் பீ ஸ்ப்ரெட்ரம் எஸ்சி 7731 காரெட்க்ஸ் ஏ7 குவாட்கோர் பிராசஸர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ்

ஸ்டோரேஜ்

இரு கருவிகளிலும் கூடுதல் மெமரி சிறப்பாக இருக்கின்றது. ஹானர் 4சியை பொருத்த வரை 8 ஜிபி ரோம், 32 ஜிபி வரை மெமரி மூலம் நீட்டிக்கும் வசிதியம் ஹானர் 4சியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா

ஹானர் 4சி 13 எம்பி ப்ரைமரி கேமராவும் ஹானர் பீ கருவியில் 8 எம்பி ப்ரைமரி கேமராவும் வழங்கப்பட்டுள்ளதால் துள்ளியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

செல்பீ

செல்பீ

ஹானர் 4சியில் 5 எம்பி முன்பக்க கேமராவும் ஹானர் பீ கருவியில் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

யூசர் இன்டர்ஃபேஸ்

யூசர் இன்டர்ஃபேஸ்

இரு கருவிகளிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் எமோஷன் 3.0 யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கின்றது. ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த எமோஷன் 3.0 யூசர் இன்டர்ஃபேஸ் சிறப்பான ஒன்றாக இருக்கின்றது.

பேட்டரி பேக்கப்

பேட்டரி பேக்கப்

ஹூவாய் நிறுவனத்தை பொருத்த வரை இதன் கருவிகளில் பேட்டரி சேவிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் சிறப்பான பேட்டரி பேக்கப் கிடைக்கின்றது. இதோடு ஹானர் 4சி கருவியில் 2550 எம்ஏஎச் பேட்டரியும், ஹானர் பீ கருவியில் 1730 எண்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

இரு கருவிகளிலும் டூயல் சிம் ஸ்லாட், வை-பை ஹாட்ஸ்பாட், ப்ளூடூத், 3ஜி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

விலை

விலை

ஹூவாய் நிறுவனம் இரு கருவிகளையும் தகுந்த விலை பட்டியலில் வழங்குகின்றது. ஹீனர் 4சியின் விலை ரூ.8,999 என்றும் ஹானர் பீ விலை ரூ.4,499 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Here are the features of both smartphones, which makes it most durable handsets under the price tag or Rs. 10,000.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X