மே 21: ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்.!
பின்பு ஜூன் 11 ஆம் தேதி இந்தியாவிலும் இந்த ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹூவாயின் ஹானர் பிராண்டு வரும் மே 21-ம் தேதி புதிய ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை லண்டனில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு ஜூன் 11 ஆம் தேதி இந்தியாவிலும் இந்த ஹானர் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்மையில் வெளிவந்த ஹானர் 20 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.21-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோரி கிரிண் 710எஸ்ஒசி சிப்செட் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
ஹானர் 20 லைட் சாதனத்தின் பின்புறம் 24எம்பி + 8எம்பி + 2எம்பி என மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சேமிப்பு:
இக்கருவியில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.

பேட்டரி:
ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications