Home
News

ஒரே நாளில் ட்ரிபிள்ஸ் அடிக்கும் பிராண்டுகள்.. பவர்புல் போன் ரிலீஸ் செய்யும் Oppo, Honor, Red Magic..

நவம்பரில் வரவிருக்கும் பல ஸ்மார்ட்போன் வெளியீடுகளுக்கான எதிர்பார்ப்புடன் ஸ்மார்ட்போன் சந்தைக்கு கலகலப்பாக உள்ளது. ஹானர் (Honor), ஒப்போ (Oppo) மற்றும் ரெட் மேஜிக் (Red Magic) போன்ற முக்கிய பிராண்டுகள் நவம்பர் 23 அன்று சீனாவில் அதன் போன்களை அறிமுகம் செய்கின்றன.

நவம்பர் 2023 இல் வரவிருக்கும் இந்த புதிய ஃபோன்களில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது பற்றிய விரிவாக இப்போது பார்க்கலாம்.

ஒரே நாளில் ட்ரிபிள்ஸ் அடிக்கும் பிராண்டுகள்.. பவர்புல் போன் ரிலீஸ்..

ஹானர் 100 சீரிஸ்: ஹானர் 100 மற்றும் ஹானர் 100 ப்ரோ (Honor 100 and Honor 100 Pro):
ஹானர் 100 (Honor 100) மற்றும் ஹானர் 100 ப்ரோவை (Honor 100 Pro) உள்ளடக்கிய ஹானர் 100 சீரிஸ் நவம்பர் 23 அன்று சீனாவில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, பல்வேறு சீன ஸ்ட்ரீமிங் தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது. ஹானர் 100 ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3) உடன் வருகிறது.

ஹானர் 100 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 (snapdragon 8 gen 2) சிப்செட் உடன் வரும். இரண்டு மாடல்களும் மேம்பட்ட PWM டிம்மிங் தொழில்நுட்பத்துடன் 1.5K டிஸ்ப்ளே மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கும். கூடுதலாக, 100W வயர்டு சார்ஜிங் ஆதரவு இந்த சாதனங்களின் முக்கிய சிறப்பம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ ரெனோ 11 சீரிஸ் (Oppo Reno 11 Series):
ஒப்போ ரெனோ 11 (Oppo Reno 11) மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) ஆகியவற்றை உள்ளடக்கிய Oppo Reno 11 தொடர், சீனாவில் நவம்பர் 23 ஆம் தேதி அறிமுகமாகிறது. Oppo Reno 11 ஆனது மீடியாடெக் டிமென்சிட்டி 8200 (MediaTek Dimensity 8200) சிப் மூலம் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரெனோ 11 உடன் 67W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ஒப்போ ரெனோ 11 ப்ரோ ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 (Qualcomm Snapdragon 8 Plus Gen 1) சிப்செட்டைக் கொண்டிருக்கும். இரண்டு மாடல்களிலும் 32MP செல்ஃபி கேமரா, 8MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 32MP டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவை அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், ரெனோ 11 ப்ரோ 50எம்பி பிரைமரி சென்சார் உடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. ரெனோ 11 ப்ரோ 80W சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரெட்மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro):
ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Qualcomm Snapdragon 8 Gen 3) சிப் மூலம் இயங்கும் முதல் கேமிங் ஸ்மார்ட்போனாக வரவுள்ளது. இது நவம்பர் 23 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது கூலிங் ஃபேன் மற்றும் கஸ்டமைஸ் செய்யக்கூடிய RGB லைட்டிங் உடன் வருகிறது. இது 80W வயர்டு சார்ஜிங்கால் ஆதரிக்கப்படும்.

ரெட் மேஜிக் 9 ப்ரோ (Red Magic 9 Pro) ஆனது 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் புதுமையான அண்டர்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா ஆகியவற்றை உள்ளடக்கியதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கேமிங் பவர்ஹவுஸ் 6,500எம்ஏஎச் பேட்டரி ஆகும். இந்த நவம்பர் 2023 ஸ்மார்ட்போன் துறைக்கு ஒரு முக்கிய மாதமாக உருவாகிறது.

நவம்பர் 2023 இல் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் கால்பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 100 Honor 100 Pro Oppo Reno 11 Oppo Reno 11 Pro Red Magic 9 Pro Launch On November 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X