Home
News

எல்லாரும் வெயிட்டிங்.. 10 நாளில் செஞ்சுரி போட வரும் Honor 100 மற்றும் Honor 100 Pro போன்கள்..

ஹானர் நிறுவனம் (Honor) இந்த மாத இறுதிக்குள் 2 புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதை நிறுவனம் அதன் 100 சீரிஸ் வரிசையின் கீழ் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் ஒரு வென்னிலா மாடல் மட்டும் ப்ரோ மாடல்கள் இடம்பெறும்.

நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் புதிய சாதனம் ஹானர் 100 (Honor 100) சீரிஸ் வரிசையில் 2 புதிய போன்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஹானர் நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின் படி, வரும் நவம்பர் 23 ஆம் தேதி நிறுவனம் புதிய ஹானர் சாதனத்தை வெளியிடும் என்று அறிவித்துள்ளது. இந்த 2 போன்களின் புகைப்படங்களையும் நிறுவனம் இப்போது வெளியிட்டுள்ளது.

எல்லாரும் வெயிட்டிங்.. செஞ்சுரி போட வரும் Honor 100 மற்றும் Pro..

இந்த 100 சீரிஸ் வரிசையில், நிறுவனம் ஹானர் 100 (Honor 100) மற்றும் ஹானர் 100 ப்ரோ (Honor 100 Pro) ஸ்மார்ட்போன் மாடல்களை அறிவிக்கவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஓஐஎஸ் (OIS) ஆதரவுடன் 50 MP பிரைமரி கேமராக்களை கொண்டிருக்கும் என்று ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த போனின் ஈர்ப்பு அம்சமாக இதன் தனித்துவமான தோற்றமுடைய கேமரா ஐலேண்ட் பார்க்கப்படுகிறது.

ஹானர் 100 மற்றும் ஹானர் 100 ப்ரோ (Honor 100 and Honor 100 Pro):

சீனாவில் உள்ள அனைத்து முக்கிய சில்லறை விற்பனையாளர்களாலும் இந்த ஃபோன்னை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த சாதனத்தின் தகவல்கள் சில சிலரை விற்பனையாளர் தளங்களில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் விவரக்குறிப்புகள் புதிய ஹானர் 100 (Honor 100) மற்றும் ஹானர் 100 ப்ரோ (Honor 100 Pro) விலைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இதன் சிறப்பம்ச தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.

ஹானர் 100 சீரிஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய தொடர்களைப் போலவே, இந்த போனையும் பிரபல நடிகர் யாங் யாங் மீண்டும் பிராண்ட் தூதராக இருக்கிறார். ஹானர் (Honor) இன் இந்த எண் தொடர் பொதுவாக இடைப்பட்ட ஃபோன்களுக்கானது என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சான்றளிக்கப்பட்ட ஒரு ஃபோனாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 (Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட்:

இது ஹானர் (Honor) இன் ஃபிளாக்ஷிப்களான மேஜிக் ப்ரோ 5 (Magic5 Pro) மற்றும் மேஜிக் வி2 (Magic V2) ஐ விடவும் அதிகம். மற்றொரு வதந்தியானது ஹானர் 100 ப்ரோ சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 (Snapdragon 8 Gen 2 SoC) சிப்செட் உடன் வெளிவரும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பெரிய விஷயமாக இல்லை, அதற்கு ஒரு காரணம் உள்ளது.

ஏன்னெனில் ஹானர் நிறுவனம் இதற்கு முன்பு வெளியிட்ட அதன் முந்தைய ஹானர் 90 ப்ரோ மாடலில் வேறு ஒரு சிப்செட்டை கொண்டிருந்தது. ஹானர் 90 ப்ரோ (Honor 90 Pro) ஸ்மார்ட்போன் சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 8+ ஜெனரல் 1 (Snapdragon 8+ Gen 1 SoC) சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஹானர் நிறுவனம் மேம்படுதலை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் கொண்டு வருகிறது..

ஹானர் 100 மற்றும் ஹானர் 100 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனத்தை ஹானர் நிறுவனம் சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு இன்னும் சுமார் பத்து நாட்கள் உள்ளன. ஆகையால், விரைவில் இந்த இரண்டு ஹானர் போன்களைப் பற்றிய கூடுதல் டீஸர்களை நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த 2 போன்களும் வேறு பெயருடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Honor 100 and Honor 100 Pro Midrange Smartphones To Launch November 23
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X