Mobile-ல சினிமா ரேஞ்சிற்கு வீடியோ எடுக்கனுமா? இந்த ஒரு Gadget உங்ககிட்ட இருந்தா போதும்!
ஸ்மார்ட்போனிலேயே சினிமா பட தோரணையில் கெத்தாக வீடியோ எடுக்க ஆசையா? அல்லது யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்று சிறந்த வீடியோவை உருவாக்க ஆசையா? அப்படியானால், உங்களிடம் இந்த ஹோயிம் ஐ-ஸ்டெடி XE 3-ஆக்சிஸ் கிம்பால் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஹோயிம் ஐ-ஸ்டெடி XE 3-ஆக்சிஸ் கிம்பால் (Hohem iSteady XE 3-Axis Gimbal) என்பது மொபைல் ஸ்மார்ட்போன் கிம்பால் சாதனமாகும். Hohem நிறுவனம் iSteady XE 3-Axis Gimbal என்ற புதிய சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனத்தை நிறுவனம் புதிய கிட் உடன் அறிமுகம் செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்த Hohem iSteady XE 3-Axis Gimbal சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட ஸ்டெபிலைசேஷன் அல்கோரிதம் வழங்கப்பட்டுளது.

இதனால், நீங்கள் படம்பிடிக்கும் அணைத்து காட்சிகளும் எந்தவித அதிர்வுகளும் இல்லாமல் மிக துல்லியமாக படம்பிடிக்கப்படுகிறது. இதில் மிகவும் உறுதியான ஸ்ட்ராங் மோட்டார்கள் வழங்கப்பட்டுள்ளது. இது 8 மணி நேரம் நீடித்து நிலைக்கும் பெரிய சைஸ் பேட்டரியை பேக் செய்துள்ளது. இன்னும் இந்த கிம்பாலில் எண்ணற்ற அம்சங்கள் நிறைந்திருக்கிறது. குறிப்பாக, இது ஸ்லிம் வடிவமைப்புடன் வெயிட்லெஸ் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
iSteady XE என்பது தொடக்க நிலையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய மற்றும் இலகுரக கிம்பல் ஆகும். இது அதன் முன்னோடியிலிருந்து மேம்படுத்தப்பட்டதாக திகழ்கிறது. இதில் iSteady 7.0 ஸ்டெபிலைசேஷன் அல்காரிதம் மற்றும் மேம்படுத்தப்பட்ட மோட்டார், 3x மோர் ஆன்டி-ஷேக் செயல்திறன் என்று எல்லாமே இருக்கிறது. உங்கள் கைகள் நடுங்கினாலும், நிலையான மற்றும் மென்மையான வீடியோக்களை நீங்கள் படமெடுக்கலாம்.
இது உங்கள் வீடியோவை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இந்த கிம்பால் எளிய 4 பட்டன்கள் மற்றும் 1 ஜாய்ஸ்டிக் கண்ட்ரோலரை கொண்டுள்ளது. ஃபங்ஷன் பட்டனை ஒருமுறை அழுத்துவதன் மூலம் லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ரெய்ட் பயன்முறைக்கு இடையே மாறலாம். M பட்டனை ஒருமுறை அழுத்துவதன் மூலம் கிம்பல் பயன்முறைகளுக்கு (PF/PTF/L/POV) இடையே மாறலாம். ஃபங்க்ஷன் பட்டனை மூன்று முறை அழுத்துவதன் மூலம் Inception Mode (ஸ்பின் ஷாட்) ஐ இயக்கலாம்.

கூடுதலாக, இந்த கிம்பாலின் புதிய AI ஆனது முகம் கண்காணிப்பு மூலம் முகங்கள், விலங்குகள், பொருள்கள் மற்றும் பலவற்றை அடையாளம் காண்கிறது. ஜாய் ஆப்ஸ் உங்கள் வீடியோக்களை துல்லியமாகவும், ப்ரொபெஷனல் தர உள்ளடக்கமாக மாற்றுகிறது. இந்த கிம்பல் ஒரு பாதுகாப்பு கேரி கேஸ், ஒரு ட்ரைபாட் மற்றும் ஒரு டைப்-C கேபிள் ஆகியவற்றுடன் வருகிறது.
இது மூன்று வண்ண லைட் விருப்பம் மற்றும் 10 நிலை பிரைட்னஸ் கொண்ட ரிச்சார்ஜபிள் மேக்னெட்டிக் ஃபில் லைட் உடன் வருகிறது. வெவ்வேறு லைட்டிங் விருப்பங்களுடன் இந்த மேக்னெட்டிக் லைட் வருகிறது. கிம்பாலின் மேற்புறம் அல்லது எந்த உலோகப் பரப்பிலும் ஃபில் லைட்டை நீங்கள் இணைத்துக்கொள்ளலாம். இந்த Hohem iSteady XE 3-Axis Gimbal சாதனத்தின் அசல் விலை ரூ.7,990 ஆகும். ஆனால், Amazon தளத்தில் இது ரூ.6,990 விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








