வந்துட்டான்.. NOKIA லேப்டாப்.. 2-இன்-1 ஸ்டைலில் ஒட்டுமொத்த மார்க்கெட்டும் மிரளுது.. HMD க்ரோம்புக்!
நோக்கியா (NOKIA) நிறுவனத்தின் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் வணிகத்தை கையகப்படுத்தி (உரிமத்தை வாங்கி), பின்னர் அதன் சொந்த ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளாக விரிவடைந்த எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனம் ஆனது அதன் முதல் லேப்டாப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எக்ஸ் (X) பயனர் @smashx_60 வழியாக கிடைத்துள்ள ஒரு புதிய லீக் ஆனது எச்எம்டி பிராண்ட் ஆனது ஒரு க்ரோபுக் மாடலை தயாரிப்பதாக கூறுகிறது.. அது எச்எம்டி (க்ரோம்)புக் சிஎஸ்-1 ஃபிளிப் என்கிற மாடல் பெயரின் கீழ் இது அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது எளிமையாக இது எச்எம்டி புக் சிஎஸ்-1 ஃபிளிப் (HMD Book CS-1 Flip) என எளிமையாக அழைக்கப்படலாம்.

மாடல் பெயரில் உள்ள "ஃபிளிப்" என்கிற வார்த்தை எச்எம்டி நிறுவனத்தின் முதல் லேப்டாப் மாடல் ஆனது 360-டிகிரி கீல் (360-degree hinge) உடன் வரும் என்பதைக் குறிக்கிறது, இது பயனர்கள் தேவைப்படும்போது அதை டேப்லெட்டை போல மடிக்க அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இது ஆசஸ் (Asus) மற்றும் லெனோவா (Lenovo) போன்ற பிராண்டுகளின் கீழ் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ள கன்வெர்ட்டபிள் க்ரோம்புக் (Covertable Chromebook) மாடல்களை போலவே இருக்கலாம்; கண்டிப்பாக அவைகளுக்கு ஒரு புதிய போட்டியாளர் ஆகவும் இருக்கும். எச்எம்டி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை - குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஏனெனில் எச்எம்டி சமீபத்திய ஆண்டுகளில் ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள் மற்றும் ஆக்சஸெரீஸ்களில் விரிவடைந்து இருந்தாலும் சொந்த லேப்டாப் எதையும் அறிமுகம் செய்யவில்லை. கடந்த காலங்களில் நோக்கியா-பிராண்டட் லேப்டாப்கள் ஆனது உரிம ஒப்பந்தங்கள் மூலம் தோன்றின - ப்யூர்புக் (PureBook) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன, ஆனால் அந்த லேப்டாப்கள் எச் எம்டி ஆல் உருவாக்கப்படவில்லை. இந்த முறை, நிறுவனம் அதன் சொந்த பிராண்டிங்கின் கீழ் பிசி (PC) துறையில் நுழைவது போல் தெரிகிறது.
எச்எம்டி புக் சிஎஸ்-1 ஃபிளிப் லேப்டாப்பில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? தற்போது வரையிலாக இந்த லேப்டாப்பின் ஹார்ட்வேர் விவரங்கள் பற்றி எந்த விவரங்களும் இல்லை. இருப்பினும் இந்த லேப்டாப்பில் எச்எம்டி நிறுவனமானது இன்டெல் ப்ராசஸரை பயன்படுத்தலாம் என்று வெளியான லீக் குறிப்பிடுகிறது.
பெரும்பாலான மலிவு விலை க்ரோம்புக் மாடல்கள் ஆனது பொதுவாக மீடியாடெக் (MediaTek) நிறுவனத்தின் கொம்பானியோ (Kompanio) சீரீஸ் போன்ற ஏஆர்எம் அடிப்படையிலான சிப்களுடன் (ARM-based chips) அனுப்பப்படுகின்றன. எனவே இன்டெல் உடன் செல்வது எச்எம்டி-யின் இந்த லேப்டாப் மாடலை "சற்று உயர்ந்ததாக" வைக்கக்கூடும்.
இருப்பினும் இப்போதைக்குட்டட் எதையும் உறுதியாக கூற முடியாது. டிஸ்பிளே சைஸ், ரேம் அல்லது ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் அல்லது பேட்டரி குறித்து மேலோட்டமான அம்சங்கள் கூட வெளியாகவில்லை. மேலும் எச்எம்டி புக் சிஎஸ்-1 ஃபிளிப் லேப்டாப்பின் விலை நிர்ணயமும் ஒரு மர்மமாகவே உள்ளது.
சமீபத்தில் எச்எம்டி க்ளோபல் (HMD Global) நிறுவனமானது எச்எம்டி டெர்ரா எம் (HMD Terra M) என்கிற புதிய ரக்டு மொபைல் போனை அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது அரசு நிறுவனங்கள், பாதுகாப்பு படைகள், முன்னணி ஊழியர்கள் மற்றும் நிறுவன குழுக்களுக்காக வடிவமைக்கப்பட்ட அல்ட்ரா ரக்டு ஸ்மார்ட் ஃபீச்சர் போன் (Ultra rugged smart feature phone) ஆகும்.
எச்எம்டி டெர்ரா எம் விலை, விற்பனை: கடுமையான சூழல்களுக்காக உருவாக்கப்பட்ட டெர்ரா எம் மாடல் ஆனது 2026 முதல் காலாண்டில், எச்எம்டி செக்யூர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளர்கள் மூலம் வாங்க கிடைக்கும் என்று ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் விலை நிர்ணயம் மற்றும்சரியான விற்பனை தேதி குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








