நோக்கியா 8 மாடலை விட பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை ரிலிஸ் செய்யும் HMD

By Siva
|

HMD நிறுவனம் சமீபத்தில் லண்டனில் நடந்த நிகழ்ச்சி ஒன்றி நோக்கியா 8 மாடலை விட பெரிய டிஸ்ப்ளேவை கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது.

நோக்கியா 8 மாடலை விட பெரிய டிஸ்ப்ளே ஸ்மார்ட்போனை ரிலிஸ் செய்யும் HMD

சமீபத்தில் வெளியான நோக்கியா 3, நோக்கியா 5, மற்றும் நோக்கியா 6 மாடல்களை விட நோக்கியா 8 உயர்தொழில்நுட்ப வசதியும், அதிநவீன மாடலையும் கொண்டது. கடந்த சில மாதங்களாக அனைவரின் விரும்பத்தக்க மாடலாக இந்த மாடல் இருந்து வருகிறது. இந்த மாடல் ரூ.45000 என்ற விலையில் வரும் செப்டம்பர் முதல் உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களின் கைகளில் தவழ உள்ளது.

நோக்கியா 8 மாடல் குறித்து அனைவரும் பெருமையாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில் HMD தற்போது அடுத்த மாடலை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளது. HMD நிறுவனத்தின் உலகளாவின் மார்க்கெட்டிங் மேனேஜர் நீல் பிராட்லி என்பவர் இதுகுறித்து பேசியபோது, 'இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த புதிய மாடல் அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பது மட்டுமின்றி அதிநவீன மாடலாக இருக்கும்

சியோமி அறிமுகப்படுத்தும் மிஜியா 4கே காம்பாக்ட் ஆக்ஷன்.!சியோமி அறிமுகப்படுத்தும் மிஜியா 4கே காம்பாக்ட் ஆக்ஷன்.!

ஆனால் இந்த மாடல் குறித்து எந்தவிதமான தகவல்களையும் அவர் வெளியிடாமல் ரகசியம் காத்தது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பெரிய டிஸ்ப்ளே இருந்தால் மட்டும் அது வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுவிடாது என்பது தெரிந்து உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய வகையிலும் இந்த போன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய மாடல் வரும் 2018ஆம் ஆண்டு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஜாம்பவனாக இருக்கும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்துடன் போட்டி போட நாங்கள் விரும்பவில்லை என்றும் எங்களது குறிக்கோள் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என்றும் நீல் பிராட்லி மேலும் கூறியுள்ளார்.

தற்போது மீண்டும் உலகளாவிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் இடம்பிடிப்பதில் மட்டுமே நோக்கியா நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாகவும் ஒரு நிரந்தர இடத்தை பிடித்துவிட்டால் பின்னர் லாபம் பார்ப்பது எளிது என்பதும்தான் நோக்கியா நிறுவனத்தின் தற்போதைய எண்ணமாக இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
While we are still drooling over the Nokia 8, HMD seems to have started working on another smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X