பட்ஜெட் பிரியருக்கு விருந்து.. 108MP ரியர் கேமரா.. 50MP செல்பி கேமரா.. பட்டைய கிளப்பும் HMD Okra லீக்ஸ்..
எச்எம்டி குளோபல் (HMD Glonal) நிறுவனம் சமீபத்தில் பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்தது. இப்போது அடுத்தபடியாக நிறுவனம் எச்எம்டி ஓர்கா (HMD Orka) என்ற புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை (budget segment smartphone) 108MP கேமராவுடன் (camera) அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் இந்த புதிய போனில் நாம் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் மற்றும் என்ன விலையில் இந்த போனை எதிர்பார்க்கலாம் என்பது இங்கே.
HMD Global நிறுவனம் Orka என்ற புதிய மிட்-ரேஞ் ஸ்மார்ட்போன் (HMD mid-range smartphone) மாடலை அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக சமீபத்திய லீக் தகவலாக குறிப்பிடுகின்றன. இந்த புதிய போனை எச்எம்டி நிறுவனம் 108MP மெயின் கேமராவுடன் அறிமுகம் செய்யுமென்று லீக் தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. முன்பக்கத்தில், இந்த HMD Orka சாதனம் 50MP செல்பி கேமராவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் பிரியருக்கு விருந்து.. 108MP ரியர் கேமரா.. 50MP செல்பி கேமரா போன்:
மிட் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் 108MP ரியர் கேமரா மற்றும் 50MP செல்பி கேமராவை வழங்கி, மக்களை கவர்ந்திழுக்க HMD திட்டமிட்டுள்ளது தெளிவாக தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தில் HMD நிறுவனம் 8GB ரேம் (RAM) உடன் 128GB அல்லது 256GB ஸ்டோரேஜ் (Storage) ஆதரவை வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய எச்எம்டி ஓர்கா (HMD Orka) ஸ்னாப்டிராகன் ஆர்ம் சிப்செட்டை (Snapdragon ARM chip) பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
HMD குளோபல் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து அடிக்கடி இணையத்தில் லீக் தகவலை வெளியிடும் லீக்கர் @smashx_60 இடமிருந்து தான் புதிய எச்எம்டி ஓர்கா (HMD Orka) ஸ்மார்ட்போன் பற்றிய விபரங்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்பும் இதே லீக்கரிடம் இருந்து வெளிவந்த HMD இன் புதிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய லீக்கள் பெரும்பாலும் உண்மையானது. இதனால், தற்போது இவர் வெளியிட்டுள்ள தகவலும் உண்மையாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
எச்எம்டி ஓர்கா மொபைல் (HMD Orka Mobile):
எச்எம்டி ஓர்கா (HMD Orka) ஸ்மார்ட்போனை பிரதிபலிக்கும் புகைப்படங்களுடன் இந்த லீக் தகவல் வெளியாகியுள்ளது. இதில் உள்ள Orka என்ற பெயர், இந்த போனின் கோட்நேம் (codename) ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) போனின் நெருக்கமான தோற்றத்தை பெற்றுள்ளது. இதன் கலர்புல் தோற்றம் நம்மை வியக்க வைக்கிறது.
லீக் தகவலில் காணப்பட்ட HMD Orka ஸ்மார்ட்போன் சாதனம் ப்ளூ, கிரீன் அல்லது பர்பிள் நிறங்களில் காணப்பட்டுள்ளது. புகைப்படத்தில் 108MP கேமரா என்ற வார்த்தை கேமரா மாட்யூல் அருகே தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் இந்த ஸ்மார்ட்போன் 50MP கேமராவை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் IPS பேனல் உடன் 6.78" இன்ச் டிஸ்பிளேவை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
எச்எம்டி ஓர்கா விலை (HMD Orka Price):
இந்த டிஸ்பிளே 1080p டிஸ்பிளே தரத்தில் 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் இயங்கும் என்று கூறப்படுகிறது. இந்த HMD "Orka" ஸ்மார்ட்போன் சாதனம் 33W சார்கிங்கை ஆதரிக்கும் என்றும், இது 5000mAh பேட்டரி உடன் வெளிவர அதிக வாய்ப்பிருப்பதாக லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. HMD Okra ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 15,000 முதல் ரூ.20,000 பட்ஜெட்டிற்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








