Home
News

என்ன போன்-டா இது? நிலவை கைக்குள் அடக்கிய HMD.. புது போனில் காணப்படும் POGO பின்.. பரபரப்பில் மொபைல் சந்தை..

எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அதனுடைய எச்எம்டி ஸ்கைலைன் (HMD Skyline) ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து, HMD குளோபல் நிறுவனம் மற்றொரு புதிய பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று தற்போது லீக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய சாதனத்தில் HMD நிறுவனம் போகோ பின்களை வழங்கியுள்ளதாக லீக் புகைப்படங்கள் காண்பிக்கின்றன. இந்த POGO பின் எதற்கானது? இது என்ன செய்யும்? என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

நோக்கியா (Nokia) நிறுவனத்தை கையகப்படுத்திய எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் வரிசையை நிறுத்திவிட்டு, இப்போது அதன் சொந்த பிராண்டின் கீழ் புதிய HMD ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது. சமீபத்தில், எச்எம்டி ஸ்கைலைன் போனை அறிமுகம் செய்த நிறுவனம், இதனை தொடர்ந்து எச்எம்டி மூன் நைட் (HMD Moon Knight) என்ற போனை வெளியிடவுள்ளது.

என்ன போன்-டா இது? நிலவை கைக்குள் அடக்கிய HMD.. புது போனில் POGO பின்..

எச்எம்டி மூன் நைட் (HMD Moon Knight):

டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள தகவல் படி, இந்த புதிய எச்எம்டி மூன் நைட் (HMD Moon Knight) ஸ்மார்ட்போன் சாதனம் காணப்பட்ட மாடல் எண் விபரம், இதில் என்ன டிஸ்பிளே இருக்கும்? இந்த போனை HMD நிறுவனம் எந்த வகை சிப்செட் உடன் உருவாக்கியுள்ளது? இதன் சிறப்பம்சம் என்ன? இதை என்ன விலையில் எதிர்பார்க்கலாம் என்பது போன்ற தகவலை வெளியிட்டுள்ளது. HMD Moon Knight குறித்த கூடுதல் விபரங்கள் இதோ.

எச்எம்டி மூன் நைட் (HMD Moon Knight) மொபைல் சாதனம் TA-1691 என்ற மாடல் எண் உடன் இணையத்தில் காணப்பட்டுள்ளதாக மிகவும் பிரபலமான டிப்ஸ்டர் HMD_MEME'S (@smashx_60) மூலம் வெளியிடப்பட்டுள்ளது. லீக் தகவலில் குறிப்பிட்டுள்ள படி, விரைவில் எதிர்பார்க்கப்படும் HMD Moon Knight ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 சிப்செட் (Qualcomm's Snapdragon 8s Gen 3 chipset) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய எச்எம்டி மூன் நைட் (HMD Moon Knight) ஸ்மார்ட்போனில் நாம் 6.7' இன்ச் அல்லது 6.8' இன்ச் அளவு கொண்ட முழு எச்டி_ pOLED டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே 144Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய HMD மொபைல் (HMD Mobile) குவாட் கேமரா அம்சத்துடன் (4 ரியர் கேமரா) வெளிவர வாய்ப்புகள் அதிகம்.

POGO Pins உடன் காணப்படும் எச்எம்டி மூன் நைட் மொபைல்:

இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்புடன் சக்திவாய்ந்த போனாக வரும் என்று கூறப்படுகிறது. இதில் டூயல் ஸ்பீக்கர் ஆடியோ யூனிட்டையும் நாம் எதிர்பார்க்கலாம். யாருமே எதிர்பார்க்காத விதமாக POGO Pins இடம்பெறுவதாக லீக் தகவல்கள் காண்பிக்கின்றன. இந்த டிசைன் இதற்கு முன்பு எச்எம்டி பியூஷன் (HMD Fusion) போனில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. POGO பின் வைத்து நமக்கு என்ன பயன்?

ஸ்மார்ட்போன் உடன் கஸ்டமைன்ஸ் மொபைல் ஆக்சஸரீஸ்களை இணைக்க உதவும் பின் தான் இந்த POGO pin என்பது குறிப்பிடத்தக்கது. HMD நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனுடன் என்னென்ன புதிய ஆக்சஸரீஸ்களை இணைக்க அனுமதிக்கப்போகிறது என்பதை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இந்த புதிய HMD Moon Knight ஸ்மார்ட்போன் சாதனம் ரூ. 20,000 விலை ரூ. 24,000 விலைக்குள் எதிர்பார்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD Moon Knight Could Be Equipped With POGO pins Snapdragon 8s Gen 3 Chipset Full HD+ pOLED Display
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X