Home
News

ஆயுசுக்கும் டேட்டா, Wi-Fi தேவையில்லை.. HMD, Lava-வின் புது D2M மொபைல்ஸ்.. OTT, லைவ் டிவி சேனலாம் உண்டு.. மாஸ்!

எச்எம்டி (HMD) மற்றும் இந்திய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் பிரண்டான லாவா (Lava) ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து விரைவில் D2M என்றழைக்கப்படும் டைரக்ட்-டு-மொபைல் (Direct-to-Mobile) அம்சம் கொண்ட மொபைல் போன்களை (mobile phones) அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த போன்கள் மட்டும் சந்தைக்குள் விற்பனைக்கு வந்தால், ஆயுசுக்கும் உங்களுக்கு டேட்டா (data or internet) மற்றும் வைஃபை (Wi-Fi) நன்மைகள் தேவைப்படாது. பொழுதுபோக்கிற்காக, விலை உயர்ந்த டேட்டா பேக்குகளையும் நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. இதனால், எவ்வளவு பணம் மிச்சமாகும் என்று யோசித்து பாருங்கள் மக்களே.

முன்னர் நோக்கியா மொபைல்ஸ் (Nokia mobiles) என்று அறியப்பட்ட நிறுவனம் இப்போது எச்எம்டி (HMD) என்ற பெயரில் புது பொலிவுடன் இயங்கி வருகிறது. இத்துடன் இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான லாவா இணைந்து, இந்தியாவில் மிக விரைவில் டைரக்ட்-டு-மொபைல் (D2M) இயக்கத்துடன் இயங்கும் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பு IIT-கான்பூர் கூட்டாண்மையில் இயங்கும் ஃப்ரீ ஸ்ட்ரீம் டெக்னாலஜிஸ், தேஜாஸ் நெட்வொர்க்ஸ் மற்றும் சின்க்ளேர் ஆகிவற்றின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்படுகிறது.

ஆயுசுக்கும் டேட்டா, Wi-Fi தேவையில்லை.. HMD, Lava-வின் புது D2M மொபைல்

ஆயுசுக்கும் டேட்டா, இன்டர்நெட், Wi-Fi தேவையில்லை.. HMD, Lava-வின் புது D2M மொபைல்ஸ்:

ஃப்ரீ ஸ்ட்ரீம் டெக்னாலஜிஸ் (Free Stream Technologies), தேஜாஸ் நெட்வொர்க்ஸ் (Tejas Networks) மற்றும் சின்க்ளேர் (Sinclair) ஆகிய மூன்று நிறுவனங்களும் இந்தியாவில் மிக முக்கியமான நெட்வொர்க்கிங் சேவையை வழங்கி வருகின்றன. இப்போது, இவர்களின் உதவியுடனும் HMD வழிகாட்டுதலுடன், இந்திய பிராண்டான லாவா தனது முதல் D2M மொபைல் சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமானால், பல பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை நீங்கள் இன்டர்நெட் இல்லாமல் கண்டு மகிழலாம்.

புதிய D2M மொபைல் போன்கள், ஸ்போர்ட்ஸ் (sports), நியூஸ் (NEWS) மற்றும் அவசர எச்சரிக்கைகள் (emergency alerts) போன்ற நேரடி ஒளிபரப்பு சேவைகளை நேரடியாக உங்கள் சாதனங்களில் பெற அனுமதிக்கும். அதுவும் குறிப்பாக, இந்த சேவைகளை பயன்படுத்த மொபைல் பயனர்களுக்கு இன்டர்நெட் அல்லது Wi-Fi போன்ற எந்தவித சேவையும் தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்பு, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பெரியளவில் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டைரக்ட்-டு-மொபைல் (Direct-to-Mobile - D2M) என்றால் என்ன?

D2M தொழில்நுட்பம் பற்றி தெரியாதவர்களுக்கு, இன்னும் தெளிவாக புரியும் படி கூற வேண்டுமென்றால், டைரக்ட்-டு-மொபைல் (D2M) என்பது ஒரு மேம்பட்ட ஒளிபரப்பு தொழில்நுட்பமாகும். இது பாரம்பரிய டிவியைப் போலவே, ஒளிபரப்பு அலைகளைப் பயன்படுத்தி மொபைல் சாதனங்களுக்கு நேரடியாக OTT உள்ளடக்கம், லைவ் டிவி சேனல்ஸ், ஆடியோ, வீடியோ, SMS மற்றும் முக்கியமான எச்சரிக்கை நோட்டிபிகேஷன்களை வழங்க அனுமதிக்கிறது.

இது மொபைல் டேட்டா மற்றும் வைஃபை தேவையை தவிர்த்து மக்களை இணைப்பில் இணைந்திருக்க உதவுகிறது. குறைந்த இணைப்பு மண்டலங்கள் மற்றும் இணைய சேவை இல்லாத இடங்களில் மக்களை இணைந்திருக்க வழிவகுக்குகிறது. இந்த D2M மொபைல் மூலம் என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

D2M மொபைல் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

1. டேட்டா அல்லது வைஃபை இல்லாமல் லைவ் டிவி சேனல் உள்ளடக்கங்களை பார்க்கலாம்.
2. இன்டெரென்ட் தேவை இல்லாமல் ஸ்போர்ட்ஸ் மற்றும் செய்திகளை போனில் பார்த்து மகிழலாம்.
3. இயற்கை பேரழிவுகள் குறித்த எச்சரிக்கை செய்திகளை நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் பெறலாம்.
4. மின் தடைகளின் போது அவசர எச்சரிக்கை செய்திகளை பெறலாம்.

5. கிராமப்புறங்களில் உள்ளவர்களும் அன்லிமிடெட் பொழுதுபோக்கை அனுபவிக்கலாம்.
6. குறைந்த இணைப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஏற்றது
7. விலையுயர்ந்த டேட்டா திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.
8. பணம் நிறைய மிச்சமாகும்.

இந்தியாவில் டெலிகாம் திட்டங்கள் வருடத்திற்கு வருடம் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த வருடம் நிகழ்ந்த திடீர் விலை ஏற்றத்தில் இருந்தே, மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வெளியில் வரவில்லை. இதற்கு இடையில், இந்த வருட இறுதிக்குள் மீண்டும் ஒரு டெலிகாம் விலை ஏற்றம் நிகழ வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ல் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்றவை இன்னும் விலை உயர்ந்தவையாக மாற அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதை சமாளிக்க D2M மொபைல் உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HMD and Lava To Launch D2M Mobile Phones Which Gives Lifetime No Data Internet or Wi-Fi Streaming In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X