இனி "நோக்கியா" ஆட்டம்., பதுங்கியது பாயத்தானோ- 2020 புதிய மாடல் போன் அறிமுகமா?

|

நோக்கியா போன் என்பது தொலைபேசி வரிசையில் தாய்வீடு போன்றது என்றே கூறலாம். அந்தளவு இந்தியர்களிடம் பெரிதளவு அறிமுகமானதும், பரீட்சியம் ஆனதும் நோக்கியா தான். நோக்கியாவில் விளையாடிய ஸ்னேக் கேம், அந்த முட்டையை பிடிக்க வரும் ஸ்வாரஸ்யம் மிகுந்த வண்ணம் இருக்கும்.

அண்டர்டேக்கர் போல் பல உயிர்

அண்டர்டேக்கர் போல் பல உயிர்

எத்தனை முறை கீழே விழுந்தாலும் தண்ணீரில் விழுந்தாலும் அண்டர்டேக்கர் போல் பல உயிர் என்ற விளையாட்டுச் சொல் போல் உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும், சற்று சிந்தித்தால் நோக்கியா இந்திய சந்தையை ஆக்கிரமித்த காலத்தில் மொபைல் போன் மூலம் அவ்வளவு பாதிப்பு இருந்ததில்லை.

எச்எம்டி குளோபல்

எச்எம்டி குளோபல்

நோக்கியா பிராண்ட் மொபைல்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் சில காலமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நோக்கியா ஸ்மார்ட்போன் நோக்கியா 2.3, கடைசியாக அறிமுகம் செய்தது. இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு எச்எம்டி குளோபல் நிறுவனம் மிக விரைவில் களத்தில் போட்டிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை தயாரிப்பு அதிகாரி ஜூஹோ சர்விகாஸ்

தலைமை தயாரிப்பு அதிகாரி ஜூஹோ சர்விகாஸ்

புத்தாண்டை முன்னிட்டு கடந்த சனிக்கிழமையன்று எச்எம்டி குளோபல் தலைமை தயாரிப்பு அதிகாரி ஜூஹோ சர்விகாஸ், தனது டுவிட்டர் வழியாக புதிய பதிப்பு ஒன்றை அறிமுகம் செய்யும் தொணியில் பதிவு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

ஜியோ பட்ஜெட் பயணர்களா?- தினசரி 1.5 ஜிபி டேட்டா., இதோ 4 புதிய திட்டங்கள்ஜியோ பட்ஜெட் பயணர்களா?- தினசரி 1.5 ஜிபி டேட்டா., இதோ 4 புதிய திட்டங்கள்

#nokia #original

#nokia #original

அந்த பதிவில் இது #CES, #MWC நிகழ்வுகளை எதிர்பார்த்து ஆடிட்டாஸ் நிறுவனத்தில் புதிய காலணிகளை வாங்கும் நான்காவது ஆண்டு இது என்றும். இந்த ஆண்டு சிறந்த ஆண்டாக இருக்கும். இதன்மூலம் புதிய #nokia #original @nokiamobile அறிமுகம் செய்யப்படும் என்ற வகையில் பதிவிட்டிருந்தார்.

ஒரிஜினல் நோக்கியா மொபைல்

ஒரிஜினல் நோக்கியா மொபைல்

அவர் வெளியிட்டுள்ள ஒரிஜினல் நோக்கியா மொபைல் குறித்த எந்த விவரங்களையும் எச்எம்டி நிறுவனம் தற்போது வரை வெளியிடவில்லை. நோக்கியா 3310 மற்றும் நோக்கியா 8110 போன்ற நோக்கியா மொபைல்களின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு எச்எம்டி குளோபல் நிறுவனம் முன்னதாகவே அறிமுகப்படுத்தியுள்ளது. இதையடுத்து அடுத்ததாக அறிமுகமாகவுள்ள ஒரிஜினல் நோக்கியா மொபைல் என்னவாக இருக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

சூரியனில் ஓம் சத்தம் கேட்கிறது: கிரண்பேடி வீடியோ ஆதாரம்., டுவிட்டரில் கிளம்பிய போர்சூரியனில் ஓம் சத்தம் கேட்கிறது: கிரண்பேடி வீடியோ ஆதாரம்., டுவிட்டரில் கிளம்பிய போர்

ஜனவரி 25 ஆம் தேதி சீன புத்தாண்டு

ஜனவரி 25 ஆம் தேதி சீன புத்தாண்டு

ஒரிஜினல் நோக்கியா குறித்த முழு விவரமும் சீன புத்தாண்டு அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். வருகிற ஜனவரி 25 ஆம் தேதி சீன புத்தாண்டு கொண்டாடப்பட இருக்கிறது. அந்த தேதியில் நோக்கியா ஒரிஜினல் மொபைல் குறித்து முழு தகவல் வெளிவர வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
May Hmd Global to launch a iconic nokia phone?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X