வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.. பிலிப் மாடல் உடன் வெளிவர ரெடியாகும் Nokia 2760..
பெரும்பாலான ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்புகளுக்கு மாறி அதில் அதிகம் நாட்டம் கட்டி வரும் வேளையில், நோக்கியா நிறுவனம் மட்டும் அதன் பழைய தடத்தில் இருந்து இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. ஏனெனில், நோக்கியா நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சாதனங்களைத் தொடர்ந்து பல புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்தாலும் கூட, நோக்கியாவின் பெருமைக்குரிய பியூச்சர் போன் சாதனங்களைத் தயாரிப்பதையும் நிறுவனம் இன்னும் நிறுத்தியதாகத் தெரியவில்லை.

இன்னும் ஃபீச்சர் போன் சாதனங்களை தயாரிக்கும் நோக்கியா
ஆம், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் தொடர்ந்து ஃபீச்சர் போன் சாதனங்களை தயாரிப்பதில் நோக்கியாவும் ஒன்றாக உள்ளது. இதைத் தொடர்ந்து லாவா, ஜியோ போன்ற நிறுவனங்கள், இன்னும் பியூச்சர் போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. நோக்கியா தனது அடுத்த ஃபீச்சர் போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் புதிய சாதனம் உண்மையில் ஃபிளிப் டிசைனைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய பியூச்சர் போனின் பெயர் என்ன தெரியுமா?
இந்த புதிய பியூச்சர் போனின் பெயரும் இப்போது இணையத்தில் அதன் மாதிரி புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது. நோக்கியா நிறுவனம் அடுத்து அறிமுகம் செய்யப்போகும் பியூச்சர் போனின் பெயர் நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி என்று அழைக்கப்படுகிறது. இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதற்கு முன்னதாக ட்ராக்ஃபோன் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. வடிவமைப்புடன் இந்த பட்டியலினால் ஏராளமான விவரங்கள் நமக்கு இப்போது தெரியவந்துள்ளது.

நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி போனின் சிறப்பம்சம்
இணையதளத்தில், நோக்கியா 2760 பியூச்சர் போன் மாடல் எண் N139DL என்ற எண் உடன் தோன்றுகிறது. இந்த புதிய நோக்கிய பியூச்சர் போன் சாதனத்தில் 240 x 320 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி பேனல் வழங்கப்படும். இது Kai OS 3.0 இயங்குதளத்தில் இயக்கும் என்று பட்டியலில் உள்ள தகவல் தெரிவிக்கிறது. கேமரா அம்சத்தைப் பற்றிப் பார்க்கையில் இந்த நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனம் 5 மெகாபிக்சல் கொண்ட கேமராவைக் கொண்டுள்ளது. Nokia 2760 Flip 4G ஆனது 1450 mAh பேட்டரியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

14 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரி
சமீபத்திய அறிக்கையின் படி, இது 6.8 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது. அதனுடன், இது 14 நாட்கள் வரை நீடித்து நிலைக்கும் காத்திருப்பு நேரத்தைக் கொண்டுள்ளது என்று அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனத்தின் பெயர் குறிப்பிடுவது போல, இது 4G திறன் கொண்டது. Nokia 2760 Flip 4G ஆனது செங்குத்தாகத் திறக்கும் ஒரு கிளாம்ஷெல் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இணையத்தில் வெளியான புகைப்படத்தில் கட்டப்பட்டது போல, இது கருப்பு நிறத்தில் வருகிறது என்பதை அது காட்டுகிறது.

ஃபிலிப் டிசைனில் பட்டையை கிளப்பும் மாடல்
ஆனால், அறிமுகத்தின் போது நோக்கியா இந்த புதிய நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனத்தை வழக்கம் போல் பல வண்ணங்களில் வெளிப்படுத்தக் கூடிய சாத்தியம் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ராக்ஃபோன் பட்டியல், இன்னும் நேரலையில் தான் உள்ளது. அதில் இந்த புதிய நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி ஸ்மார்ட்போன் 4.33 x 2.28 x 0.76 அங்குலங்கள் மற்றும் 137 கிராம் எடையைக் கொண்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நோக்கியா 2760 ஃபிளிப் 4ஜி ஆனது பெரிய பெசல்களால் சூழப்பட்ட ஒரு சிறிய செவ்வகக் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.

நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனத்தின் ஸ்டோரேஜ்
டிஸ்பிளேயின் மேற்புறத்தில், ஒரு இயர்பீஸ் உள்ளது. அதேபோல், நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனத்தின் கீழ் பாதியில் பாரம்பரிய கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் விபரங்களைப் பற்றிப் பார்க்கையில், சேமிப்பக விவரங்கள் இணையதளத்தில் பட்டியலிடப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மைக்ரோ எஸ்டி மூலம் சேமிப்பகத்தை 32 ஜிபி வரை விரிவாக்க முடியும் என்பதை இது வெளிப்படுத்துகிறது.

நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனத்தின் இதர அம்சங்கள்
Nokia 2760 Flip 4G இன் இணைப்பு விருப்பங்களில் இந்த சாதனம் 4G, Wi-Fi, ப்ளூடூத், ஜிபிஎஸ் ஆகிய அம்சங்களுடன் வருகிறது என்பதைப் பட்டியல் காண்பிக்கிறது. இது தவிர, இந்த நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனத்தில் MP3 பிளேயர், மல்டி மீடியா மெசேஜிங் மற்றும் மின்னஞ்சல் ஆதரவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன், ஸ்மார்ட்போன் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (FCC) இணையதளத்தில் இந்த நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனம் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் அறிமுகம் எப்போது?
இவ்வளவு தெளிவான தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருந்தாலும் கூட, இந்த நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனத்தின் அறிமுகம் மிக நெருக்கமான ஒரு மூலையில் உள்ளது என்று நாம் உறுதியோடு சொல்வது நியாயமற்றது. காரணம், HMD குளோபல் Nokia நிறுவனம் இன்னும் நோக்கியா 2760 ஃபிலிப் 4ஜி சாதனத்தின் அறிமுகத்திற்கான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. எனவே, நாம் நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை நாம் சற்று காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதே இப்போதைக்கு நாம் செய்யக்கூடிய வேலையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications