சிங்கம் களமிறங்கிடுச்சு டோய்.. 108MP கேமரா.. எகுறுது ஹைப்.. Nokia ரசிகர்களுக்கு ஜாக்பாட்.. என்ன மேட்டர்?
டெக் வட்டாரம் முழுக்க இன்று இது தான் தலைப்பு செய்தி, HMD குளோபல் (HMD Global Smartphone) நிறுவனம் 108MP கேமராவுடன் ஒரு புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதென்ற தகவல் காட்டுத் தீ போல் இணையம் முழுக்க வைரலாகியுள்ளது.
வரவிருக்கும் புதிய போன் பற்றிய விபரங்கள் இப்போது இணையத்தை நிரப்பி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில், HMD குளோபல் தனது சொந்த பிராண்டிங்கின் கீழ் புதிய ஸ்மார்ட்போன்களை (New HMD Global smartphone) அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. தெரியாதவர்களுக்கு, HMD குளோபல் நிறுவனத்தில் கீழ் தான் நோக்கியா (Nokia) பிராண்ட் இயங்கி வருகிறது.

உலகத்தின் மிகவும் பிரபலமான பிராண்டை கட்டமைத்து வரும் HMD குளோபல் இடமிருந்து, அதன் முதல் ஸ்மார்ட்போன் சாதனம் (HMD's first smartphone coming soon) வெளிவரவுள்ளது. இதுவரை நோக்கியாவின் சாதனங்களை வெளியிட்டு வந்த ஸ்மார்ட்போன் (smartphone) நிறுவனம், இப்போது அதன் சொந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடவுள்ளது. இதற்காக நிறுவனம் HMD போன்ஸ் (HMD phones) என்ற புதிய போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
HMD குளோபல் முதல் ஸ்மார்ட்போன் (HMD Global First Smartphone):
இதற்கிடையில், சமீபத்திய லீக் தகவல் ஒன்று, வரவிருக்கும் புதிய HMD குளோபல் ஸ்மார்ட்போனின் முக்கிய கேமரா விவரங்கள் வெளிப்படுத்தியுள்ளது. இதில், வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் 108MP உடன் OIS அம்சம் இணங்கிய பிரைமரி கேமராவை (primary camera) கொண்டிருக்கும் என்று லீக் தகவல் (HMD Global smartphone leaks) குறிப்பிட்டுள்ளது. இந்த லீக் தகவல் Suomimobiili வழியாக வெளிவந்துள்ளது.
நினைவுகூர, கடந்த நவம்பர் 2023 இல் HMD குளோபல் 2 ஸ்மார்ட்போன்களை IMEI தரவுத்தளத்தில் வெளியிட்டது. இந்தச் சாதனங்கள் ஏப்ரல் 2024 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் வெளியான ரெண்டர் லீக் (HMD phone render leak) தகவல், வரவிருக்கும் HMD ஃபோனைப் பற்றிய முதல் பார்வையை நமக்கு வழங்கியுள்ளது.
இதில் HMD லோகோ (HMD logo) பொறிக்கப்பட்ட, 108MP OIS வார்த்தைகள் பொறிக்கப்பட்ட கேமரா புகைப்படம் தெளிவாக காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், சில நிமிடங்களுக்குள் இந்த பதிவு நீக்கப்பட்டதாக தெரிகிறது. காரணம், டிப்ஸ்டர் வழங்கிய வலைப்பக்கத்தை பார்வையிட்ட பொழுது error 404 மட்டுமே காண்பிக்கப்பட்டது.

இருப்பினும், வலைப்பக்கம் லைவில் இருந்த பொழுது காண்பிக்கப்பட்ட HMD குளோபல் போனின் புகைப்படங்களை டிப்ஸ்டர் பதிவு செய்திருக்கிறார். இதனால், இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகி புது ஹைப்பை உருவாக்கியுள்ளது. நோக்கியா ஸ்மார்ட்போன்களை மீண்டும் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவந்த பெருமை HMD குழுமத்தையே சேரும் என்பதனால், நோக்கியா (Nokia) ரசிகர்களுக்கு இந்த பிராண்டின் முதல் போன் எப்படி இருக்கும் என்ற ஆர்வத்தை அதிகரிக்க செய்துள்ளது.
108MP பிரைமரி கேமராவுடன் OIS அம்சம் (HMD Global Smartphone Spotted With 108MP with OIS):
இந்த வரவிருக்கும் புதை HMD குளோபல் ஸ்மார்ட்போன் பற்றிய மற்ற விபரங்கள் எதுவும் இன்னும் நமக்கு தெரியவில்லை. இப்போதைக்கு, இந்த வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதகமானது 108MP பிரைமரி கேமராவுடன் OIS அம்சத்தை பெரும் என்பது மட்டும் தெளிவாகியுள்ளது. இது பிரைமரி கேமரா சென்சாரின் தீர்மானம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (optical image stabilization) ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
எச்எம்டி ஸ்மார்ட்போனை சியான் வண்ண (cyan color) விருப்பத்தில் காணப்பட்டுள்ளது. இத்துடன், நிறுவனம் இன்னும் என்னென்ன வண்ணங்களை வழங்கவுள்ளது என்பது மர்மமாக உள்ளது. இந்த சாதனத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை போன்ற சிறந்த விவரங்கள் இன்னும் தெளிவாக இல்லை. இருப்பினும், சாதனத்தின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், மிகவும் பிரபலமான டிப்ஸ்டர் இவான் ப்ளாஸ் கூறுகையில், HMD பிராண்டட் பல்ஸ் (Pulse), லெஜண்ட் (Legend), பல்ஸ்+ (Pulse+), லெஜண்ட் பிளஸ் (Legend Plus), பல்ஸ் ப்ரோ (Pulse Pro) மற்றும் லெஜண்ட் ப்ரோ (Legend Pro) ஆகிய கோட்நேம்களுடன் புதிய ஸ்மார்ட்போன்களை கண்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். இதை வைத்து பார்க்கையில், HMD 6 புதிய மாடலைகளை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








